பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 549 "ஈண்டு இவ்வண்டத்துள் இராக்கதர் எனும் பெயரெல்லாம் மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக்க மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வல ஊழ துண்டுகின்றது என்று அடிமலர் தொழுது அவன் சொன்னான்” பின்னர் பயந்து ஒடிய வானரப்படை வீரர்களைத் திரும்ப அழைக்கும்படி இராமன் அங்கதனிடம் கூறினான். அங்கதன் சென்று அழைத்த போது வானரப்படைகள் பயந்து நடுங்கி வர மறுக்கின்றனர். இது கம்பனுடைய மகாகாவியத்தில் மிக அருமையானதொரு காட்சியாகும். நமது நாட்டு மக்கள் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று நாட்டில் நடக்கும் எந்த ஆட்சியைப் பற்றியும் கவலைப் படாமல் கொடுங்கோல் மன்னர்களையும் சகித்துக் கொண்டு வாய் பொத்தி இருப்பார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. இக்கருத்துக்கான ஊற்றாக அங்கதன் அழைத்த போது வானரப்படை கூறிய பதில் அமைந்திருக்கிறது. “அனுமனுடைய ஆற்றலும், நமது மன்னன் சுக்கிரீவனுடைய ஆற்றலும், இராமன் இலக்குவன் ஆகியோர்களுடைய வில்லாற்றலும் எங்களைக் காப்பதற்குப் போதாது. எங்களுக்கு ஏன் இந்த வம்பு? நாங்கள் ஏன் இந்த சண்டையிலே சாக வேண்டும்? எங்கள் உணவுக்குக் காடுகளிலும் மலைகளிலும் கனிகளும் காய்களும் உள்ளன. தங்குவதற்கு மரங்களும் குகைகளும் உள்ளன. இந்த உலகை யார் ஆண்டால் என்ன? மனிதர்கள் ஆண்டால் என்ன? அரக்கர்கள் ஆண்டால் என்ன? எங்களைப் போர்க்களத்திற்குச் சென்று சாவுங்கள் என்று கூறுவது தருமம் அல்ல” என்று வானரங்கள் கூறுவதாகக் கம்பனுடைய பாடல் எடுத்துக் காட்டுகிறது. “அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும் இருவர் தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா