பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшын — «әФ ~Qрғылшй штіisos» —зһ &sofkипosйі 556 வீடணன்-மீது இராவணன் ஏவிய சக்தி மிக்க வேல் படையைத் தன் மார்பில் ஏற்று தியாகம் செய்தான் இலக்குவன். இராவணன் விடுத்த அவ்வேற்படை இலக்குவனுடைய மார்பில் புகுந்து-அவனைக் கீழே சாய்த்தது. வீடணனும் கோபங்கொண்டு தனது சிறப்பு ஆயுதமான நெடுந்தண்டால் இராவணனுடைய தேரையும் பரிகளையும் தேரோட்டியையும் அடித்துத் தகர்த்தான். இராவணனும் கோபத்துடன் வீடணன் மீதும் அனுமன் மீதும் எண்ணற்ற கணைகளை விடுத்து அன்றைய போரை முடித்துக் கொண்டு இலங்கை நகருக்குள் போய் விட்டான். "சேய் விசும்பினின் நிமிர்ந்து நின்று இராவ ணன் சீறிப் பாய்கடும் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்திப் போயினன் செரு முடிந்தது என்று இலங்கை யூர் புகுவான்.” இலக்குவன் தன் மார்பில் இராவணனுடைய வேற்படையைத் தாங்கி வீழ்ந்தான் என்பதைக் கண்டு அனைவரும் வருந்தினர். மீண்டும் சாம்பவன் கருத்துப்படி, உடனே வெகு வேகமாக அனுமன் வடக்கு நோக்கி வான வெளியில் சென்று மீண்டும் மருத்துவ மலையைக் கொண்டு வந்தான். இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான். அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இலக்குவன் கண் விழித்துச் சுற்றிலும் பார்த்து வீடணனும் அனுமனும் மற்றவர்களும் உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்து அனுமனை புகழ்ந்தான். அனைவரும் இராமனிடம் சென்றனர். இலக்குவன், மாருதியின் மகத்தான சேவையைப் பாராட்டித் தங்கள் பக்கம் இனி வெற்றி உறுதியென்றும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்றும் பாராட்டி எல்லோரும் இராமனிடம் சென்றனர் எனக் கம்பன் கூறுகிறார். “எழுந்து நின்று அனுமன் தன்னை இரு கையால் தழுவி எந்தாய்