பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 559 வேண்டியவர்களுக்கு வேண்டியன வெல்லாம் கொடுத்தான் என்றும் ஒல்காப்போர்த் தொழிலுக்கு அதாவது எந்தவிதமான சோர்வும் அயர்வும் இல்லாமல் உற்சாகத்துடன் போர்த் தொழிலுக்கு அமைவன் ஆனான், தயார் ஆனான் என்று கம்பன் குறிப்பிடுவதில் ஒரு தனிச் சிறப்பைக் காணலாம். இராவணன் வருக தேர் எனக் கூறித் தேரை வரவழைத்தான். அந்தத் தேர் மிகவும் அபூர்வமானது. தெய்வீகத்தன்மை கொண்டது. அந்தத் தேர் மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், நெருப்பினும் செல்லத் தக்கது என்று மிகவும் நுட்பமாகக் கம்பன் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். “பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது பரந்த நீரில் செல்வது, நெருப்பிடைச் செல்வது நிமிர்ந்த போரில் செல்வது போய்நெடு முகட்டிரை விரிஞ்சன் ஊரில் செல்வது எவ்வுலகினும் செல்வது ஒர்இமைப்பின்’ என்பது கம்பனுடைய கவிநயம் மிக்க, பாடலாகும். இவ்வாறு இராவணனும் அவனது திரளான படைவீரர்களும் போருக்கு எழுந்து வந்து கொண்டிருக்கும் செய்கியை வீடணன் இராமனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுகிறாள். “எழுந்து வந்தனன் இராவணன் இராக்கதத்தானைக் கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று அழுந்து நின்றது நம்பலம் அமரரும் அஞ்சி விழுந்து சிந்தினர் என்றனர் வீடணன் விரைவான்.” இராவணன் போருக்கு எழுந்து வருகிறான் என்று அவனது வலுவான முன்னணிப் படைப்பிரிவுகள் முன் வந்து கொண்டிருக் -கின்றன வென்றும், அதைக் கண்டு நமது வானரப்படை பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் வீடணன் இராமனுக்குச் செய்தி தெரிவிக்கிறான். இங்கு போர்க்காலத்தில் வீடணனுடைய பங்கு இடைவிடாமல் இருந்து கொண்டிருப்பது பற்றியும் உடனுக்குடன் வேண்டிய தகவல்களைக் கொடுத்துக் கொண்டு,