பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo IJLJool - 3ջ(Ա, சமுதாயப பாவை -அ. சிசிப் | சிறிI -4ծՍ அங்கங்களை அறுத்து அவமானப் படுத்தினாய். உன்னுடைய அந்தக் கரங்களை வெட்டி வீழ்த்துகிறேன் பார்” என்று வஞ்சினம் கூறி இலக்குவனை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டான். "பெய் தவத்தின் ஒரு பெண் கொடி எம்முடன் பிறந்தாள், செய்த குற்றம் ஒன்றும் இல்லவள் நாசி வெம் சினத்தால் கொய்த கொற்றவ, மற்றவன் கூந்தல் தொட்டு ஈர்த்த கை தவத்திடைக் கிடத்துவேன் காக்குதி” என்றான். கும்பகருணனுடைய இந்தப் பொருள் பொதிந்த கேள்விக்கு இலக்குவனிடம் நேரடியான பதில் இல்லை. உனக்குச் சொல்லினால் பதில் கூற விரும்பவில்லை. வில்லினால் பதில் சொல்கிறேன் என்று இலக்குவன் கூறுகிறான். “அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர, மல்லினால் செய்த புயத்தவன், மாற்றங்கள் நும்பால் வில்லினால் சொல்லின் அல்லது, வெம்திறல் வெள்கச் சொல்லினால் சொலக் கற்றிலும் யாம்” எனச் சொன்னான். கம்பன் மிகவும் நயமாக இங்கு ஒரு கருத்தை இலை மறைவு காயாக எடுத்துக் காட்டுகிறான். சூர்ப்பனகை என்ன தவறு செய்தாள்? அவளைத் தொட்டுப் பிடித்து இழுத்து அவளுடைய அங்கங்களை அறுத்து அவமானப் படுத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்தாள்? கும்பகருணனுடைய இந்த கேள்விக்கு இலக்குவனிடமிருந்து நேரடியான பதில் இல்லை. சொல்லினால் பதில் இல்லாமல் வில்லினால் பதில் சொல்கிறேன் என்று கூறிப் போரைத் தொடருகிறான். ஆயினும் சூர்ப்பனகையின் பாத்திரம் இராமாயணக் கதையில் உள்ள, பின்னலும் முடிச்சுமாகும். வாலியின் மீது மறைந்து நின்று அம்பெய்ததற்கு என்ன காரணம் என்னும் கேள்விக்கு எப்படி நேரடியான பதில் இல்லையோ அதே போல சூர்ப்பனகைக்குக் கொடுக்கப் பட்ட கொடும் தண்டனைக்கும் என்ன காரணம் என்னும் கேள்விக்குக் கேட்போர் கேட்கும் போது நேரடியான பதில் இல்லை. இதில் மறைவான ஒரு அரசியல் கருத்து அமைந்திருக்கிறது. வலுவுள்ளவர்கள் சிலர் நியாயமான கேள்விகளுக்குக் கூட அது அவர்கள் மீது எழுப்பப் பட்டால் அதற்கு நேரடியாகப் பதில் கிடைப்பதில்லை. அவர்களுடைய வலுதான் பதில் சொல்லும் என்பதும்