பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusiz — «PG5 «Qрғылшй шптіsos» —- ~y_ofkитеғайт 562 அறுந்த கையையே ஆயுதமாகக் கொண்டு இராவணன் தொடர்ந்து போரிடுகிறான். இராவணனுடைய உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் சென்று தாக்கும்படியான எண்ணற்ற கணைகளை இராமன் ஏவுகிறான். இராவணன் சோர்வடைந்துத் தேர்த்தட்டின் மீது சாய்கிறான். ஆயினும் இராவணன் சோர்வு நீங்கி மீண்டும் போர் செய்யத் தொடங்கினான். கடைசியாக இராமன் இராவணனுடைய நெஞ்சு மீது குறிவைத்து பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தான். “முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் அந்தணன் படைவாங்கி அருச்சியா சுந்தரின் சிலை நாணில் தொடுப்புறா மந்தரம் புரை தோள் உறவாங்கினான்”. "அக்கணத்தில் அயன்படை ஆண்தகைச் சக்கரப்படை யோடுந்தழி இச்சென்று புக்கது அக்கொடியோன் உரம் பூமியும் திக்கனைத்தும் விசம்பும் திரிந்தவே” இராவணனுடைய மார்பில் புகுந்து அவனுடைய உயிரைக் கொன்று தின்று புறம் போன இராமனுடைய கணையைப் பற்றிக் கம்பனுடைய புகழ் பெற்ற அழகிய கவிதை கூறுகிறது. “முக்கோடிவாழ் நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடியாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர் பருகிப்புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி” இராவணன் எல்லையில்லாத வல்லமை மிக்கவன். முக்கோடி வாழ்நாள் கொண்டவன். பெரும் கடுந்தவங்கள் செய்து பல வரங்கள்