பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன் - ஒரு சமுதாயப பாவை அ. சீனிவாசன் 564 பாரிட மீதினின் அணுகித் தம்பியொடும் படைத்தலைவர் எவரும் சுற்றப் போரிடை மீண்டு ஒருவருக்கும் புறம் கொடாப் போர் வீரன் பொருது வீழ்ந்த சீரினையே மனம் உவப்ப உருமுற்றும் திருவாளன் தெரியக் கண்டான்”. இவ்வாறு போரில் புறம் கொடாத போர் வீரன் இராவணன் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை இராமன் தனது தம்பியுடனும் துணைவர்களுடனும் சேர்ந்த கண்டனர் என்பதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இன்னும் "அலைமேவும் கடல்படை சூழ் அவனியெலாம் காத்தளிக்கும் அடல் கைவிரன் சிலைமேவும் கடும் கணையால் படுகளத்தே மனத்தீமை சிதைந்து வீழ்ந்தான் புலைமேலும் செலற்கு ஒத்துப்பொது நின்ற செல்வத்தின் புன்மைத்தன்மை” நிலைமேலும் இனி உண்டோ? நீர்மேலைக் கோலம் எனும் நீர் மைத்து அன்றே? என்று கம்பன் சிறப்பாக இராவணனுடைய முடிவை நிறைவு செய்கிறார். இராவணனுடைய மரணத்திற்குப் பின் பகையும் ஒழிந்தது. இராவணன் இறந்தது கண்டு வீடணனும் இராவணனுடைய மனைவியரும் அழுது புலம்புகின்றனர். இராமன் வீடணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இறந்தப்பட்ட அரக்கர் அனைவருக்கும் வீடணன் ஈமக்கடன் செய்து முடிக்கிறான். அதன் பின்னர் இராமனுடைய ஆணைப்படி இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுகிறான். வீடணன் இலங்கை அரசனாகப் பொறுப்பேற்கிறான் 'வருந்தல் நீதி மனு நெறியாவையும் பொருந்து கேள்விப் புலமையினோய் எனா