பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт — S?q5 «Qдёлшй шптisови TamilBOT (பேச்சு) 06:29, 2 மார்ச் 2016 (UTC) «Foofkилегейi Հ66 வேடங்களைக் கலைத்து விட்டு இராஜகுமாரர்களாக ஒப்பனை செய்து கொண்டு, குகனையும் வரவழைத்து இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய எழுவரும் மற்றும் அங்கதனும் அனுமனும் சேர்ந்து அயோத்தி சென்றடைந்தார்கள். அயோத்தி அயோத்தியில் இராமனுக்கு முடி சூட்டு விழா நடைபெற்றது. இராமன் கோசல நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இந்த முடி சூட்டு விழாக்காட்சியைக் கம்பன் மிகவும் அழகாகத் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். “அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாழ் ஏந்தப் பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச விரை செறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி ” என்று கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். இராமனுடைய ஆட்சி இராம ராஜ்யம் என்று இந்திய மக்களால் போற்றப் படுகிறது. அது ஒரு நீதியான ஆட்சியாக பாரத நாட்டு மக்களுடைய உள்ளங்களில் வலுவாக இடம் பெற்றிருக்கிறது. இராமராஜ்யம் என்பது இராமனது ஆட்சி என்னும் வடிவத்தில் வால்மீகி இராமாணத்தில் உத்தர காண்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கம்பன் உத்தர காண்டத்தை எழுத வில்லை. இராமனுடைய முடிசூட்டு விழாவுடன் கம்பன் தனது மகாகாவியத்தை நிறைவு செய்துள்ளார். ஆயினும் பரதனுடைய நந்திக் கிராமத்து ஆட்சியை இராமனுடைய சொல்படி நடந்த ஆட்சியாகக் கொள்ளலாம். இராமன் முடிசூட்டிக் கொண்ட பின்னரும் தனது சகோதரர்களை இணைத்துக் கொண்டு கூட்டாக