பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 569 இருக்கிறது என்று கம்பன் கூறுவது சிறப்பான பொருள் நிறைந்த கருத்தாகும். கம்பன் இங்கு எல்லா சாத்திரங்களையும் எல்லா சமயங்களையும் குறிப்பிடுகிறார். அவருக்கு சமய வேறுபாடுகள் கிடையாது. எல்லா சமயங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்னும் கருத்தைக் குறிப்பிடுவது அவருடைய சமய சமரச நோக்கைக் குறிக்கிறது. இந்த ஆற்றின் வெள்ளம் நாட்டை வளமாக்குகிறது. அந்த ஆற்று வெள்ளத்தைக் கம்பன், பலவேறு வகைச் செல்வக் குவியல்களையும் வாணிபத்தின் மூலம் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் வணிக மக்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். “மணியும், பொன்னும், மயில்தழைப் பீலியும் அணியும், ஆனை வெண்கோடும், அகிலும் தன் இணையில் ஆரமும் இன்ன கொண்டு ஏகலால் வணிக மாக்களை ஒத்தது அவ்வாரியே” என்று அவருடைய கவிதை குறிப்பிடுகிறது. ஆற்று வெள்ளத்தில் மணியும் பொன்னும் மயிலின் சிறகுகளும் யானைத் தந்தங்களும், சந்தனக் கட்டைகளும் இன்னும் பல பொருள்களும் அள்ளி அடித்துக் கொண்டு வரப்படுகின்றன. வணிக மக்களும் தங்கள் வாணிபத்தின் மூலம்_நாட்டிற்கு பொன்னையும், மணிகளையும், மரங்களையும்,அந்தங்களையும், சந்தனக்கட்டைகளையும் இதர பொருள்களை நாட்டில் கொண்டு வந்து குவிக்கிறார்கள். அதனால் அந்த வெள்ளம் வணிக மக்களைப் போன்று உள்ளது என்று ஒப்பிட்டுக் கம்பன் ஆற்றைச் சிறப்பித்துக் கூறுகிறார். இன்னும், வயல்கள், பூந்தோட்டங்கள், நீர்நிலைகள், சோலைகள், காவுகள் முதலியவைகளுக்கெல்லாம் உயிர் போன்றது நீர். அந்த நீரை அள்ளிக் கொண்டு வருவதால் அந்த ஆறும் ஆற்று வெள்ளமும் நாட்டிற்கு உயிரைப் போன்றது என்று கம்பர் கூறுகிறார்.