பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusiz — «әФ «Qрёлшй шптіsos» —- ~P_osofisилегейi 57() “தாது உகு சோலை தோறும் சண்பகக் காவு தோறும் போது அவிழ் பொய்கை தோறும் புது மணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப்பூக வனந்தொறும் வயல் கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிர் என உலா யது அன்றே!” என்று நிலத்தை உடம்பாகவும் நீரை உயிராகவும் ஒப்பிட்டுக் கூறுகிறார். உற்பத்திச் செல்வங்கள், வாணிபம், அறிவுச் செல்வம் ஆகிய மூன்றையும் ஆற்றணியில் முக்கியமாகக் கம்பன் குறிப்பிடுகிறார். அவைகளே ஒரு நல்ல நாட்டிற்கும் நல்ல அரசியலுக்கும் ஆதாரமானவைகளாகும். எனவே ஒரு நல்ல சிறந்த அரசின் முக்கிய கடமைகள் நாட்டின் வளத்தைப் பெருக்கி உற்பத்தியை வளர்ப்பது, வாணிபத்தை வளர்ப்பது, சாத்திரங்கள், கலைகள், சமயங்கள் மூலம் அறிவுச் செல்வத்தையும் அறநெறியையும் வளர்த்தல் ஆகியவை -களாகும் என்பதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். இனிக் கம்பன் நாட்டுச் சிறப்பைக் கூறுவதைக் காண்போம். “பெரும் தடங்கண் பிறைநு தலார்க் கெலாம். பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” கோசல நாடு செல்வமும் கல்வியும் நிறைந்திருந்தது. நாள்தோறும் வருந்தி வந்தவர்களுக்கு ஈதலும் விருந்தும் அள்ளி அளிக்கும் பண்பும் நிறைந்த மக்கள் இருந்தனர். நாடு என்பது செல்வமும் கல்வியும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது கம்பனுடைய அரசியல் சிந்தனையாகும். “கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா நிலம் சுரக்கும் நிறைவளம் நன் மணி