பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. sub-gyeo–u st–sur– Glærereosuub auouă Glærersosuute 86 தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள் கட்கெல்லாம் சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம்” என்றான். இவ்வாறு கடவுள் யார் என்பதற்கு ஒரு பொதுவான முழு முதல் கருத்தாக நிலவியிருந்தlதித்துவக் கருத்தை இங்கு கம்ப்ன் எடுத்துக் கூறியுள்ளார். கம்பனுடைய இராம காதையில் இரணியன் வதைப் படலத்தில் பிரகலாதன் பேசுவதாகவுள்ள பாடல்களில் ဂ္ယီဒီး’ நிலையைப் பற்றி மிகவும் அழகான ஒரு உண்மை நிலையுைடன் இணைத்துக் கூறுகிறார். “காலையில் நறுமலர் ஒன்றைக் கட்டிய மாலையின் மலர் புரை சமய வாதியர் சூலையின் திருக்கு அலால் சொல்லு வோர்க்கெலாம் வேலையும் திரையும் போல் வேறுபாடிலான் பலவேறு நிறங்களையும் மனங்களையும் கொண்ட மலர்களை ஒரே மாலையில் ஒன்றிணைப்பதைப் போல உண்மையை உணர்ந்து உரைப்போருக்கு எந்தவிதமான வேறுபாடும் இல்லை. சமய வாதிகளின் மனநோய் வேறுபாடுகளால்தான் பேதங்கள் கற்பிக்கப் படுகின்றனவென்று கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். இராமாயணப் போர் தொடங்கி விட்டது. முதல்நாள் போரில் இராவணன் போர்க்களத்திற்கு வந்து படையை இழந்து முடியை இழந்து தோல்விடைந்து எந்த ஆயுதமுமின்றி தனியனாக நின்றான் “இன்று போய் நாளை வா” என்று இராமன் கூற இராவணன் தனது மார்பின் வல்லமை தோள்களின் வல்லமை, நாவின் வல்லமை, பத்துதலைகளின் மணி முடிகள், வாள், வீரம் அனைத்தையும் போர்க்களத்தில் விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை திரும்பினான். அடுத்து) கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப் பட்டுப் போர்க் களத்திற்கு அனுப்பப்படுகிறான். கும்பகர்ணனை