பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ്ഥl-ജ്ഞl-l. கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 88 மானமும் மறத்துறைவழுவாத கொற்ற நீதியும் குல முதல் தருமமும் என்றிவை குடியாகப் பெற்ற நுங்களால்” என்றும் “ஒருத்தன் நீதனி உலகொரு மூன்றிற்கும் ஆயினும் பழியோரும் கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ” என்றும் இராமனைப் பார்த்துக் கும்பகர்ணன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். கும் பகர்ணன் கைகளையிழந்து, கால் களையிழந்து போர்க்களத்தில் தனது இறுதி கட்டத்திலிருக்கிறான். அப்போது இராமனிடம் தனது தம்பி வீடணனைக் கடைசி வரைக் காப்பாற்றும் படி வேண்டுகிறான். “எனது தம்பி நீதியால் வந்தவன், தரும நெறியல்லாது வேறு நெறியறியாதவன். ஆதியாய் உன்னை அடைந்தான். அவனுக்கு அடைக்கலம் வேண்டுகிறேன் என்று கூறுகிறான். "நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறி யல்லால் சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி ஆதியாய் உனை யடைந்தான் அரசர் உருக்கொண்டமைந்த வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் என்று கும்பகர்ணன் வாய்மொழியாகவும் தன் தம்பிக்கு அடைக்கலம் வேண்டியதாகக் கம்பன் கூறுகிறார். இராமனுக்கும் இராவணனுக்கும் போர் தொடங்குகிறது. இராவணனுடைய மூலபலப்படை வானரப்படையை நிலை குலையச் செய்தது. இராவணன் சக்தி வாய்ந்த பலகணைகளையும் விடுக்கிறான். அவையனைத்தையும் இராகவன் செயலிழக்கச் செய்து விடுகிறான். இராவணன் மாயக்கணையை ஏவிய போது இராமன் ஞானக்கணையை ஏவி விட்டு அம்மாயக் கணையை செயலிழக்கச் செய்து விடுகிறான். அதன் பின்னர் இராவணன் தனது சூலப்படையை இராமன் மீது எறிந்தான். அது இராமனுடைய மார்பில் பட்டுப் பொடிப்பொடியாக உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதைக் கண்டு இராவணன் வியப்படைகிறான். அப்போது தான்