பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 89 இந்த இராமன் யார் என்று எண்ணுகிறான். “சிவனோ அல்லன், நான்முகன் அல்லன் திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான் தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் இவனோ தான் அவ்வேத முதற்காரணன்? என்றான்” 'யாரேனும் தான் ஆகுக யான் என் தனியாண்மை பேரேன் இன்றே வென்றி முடிப்பேன் பெயர் கில்லேன் நேரே செல்வேன் கொல்லும் அரக்கன் நிமிர் வெய்தி வேரே நிற்கும் மீள்கிலன் என்னா விடல் உற்றான்.” என்றிவ்வாறு இராவணன் வார்த்தைகளாகக் கம்பன் எடுத்துக் கூறுகிறார். இந்த இராமன் யார்? சிவனோ, நான்முகனோ, திருமாலோ வென்றால் அப்படித் தெரியவில்லை. பெரும்தவம் செய்து அளவு கடந்த ஆற்றலைப் பெறும் தகுதியுடையவனாகவும் தெரியவில்லை. ஒரு வேளை இவன்தான் அந்த வேத முதல் காரணனாக இருப்பானோ என்னும் கேள்விகளையெழுப்பிக் கொண்டு யாராயினும் சரி அவனையெதிர்த்துப் போரிடுவேன்” என்று இராவணன் ஒரு முடிவுக்கு வருகிறானென்பதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறாகக் கம்பன் இராவணன் கூற்றாகவும் தனது கடவுட் கொள்கையை விளக்குவது மிகவும் நயமாகவும் நுட்பமாகவும் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இராவணனைக் கொன்று இராமன் சீதையை சிறையிலிருந்து மீட்டான். மீட்ட பின்னர் அவளது கற்பு நிலையை நிரூபிக்க தீ புகுந்து வருமாறு சீதைக்கு இராமன் கூறுகிறான். சீதை தீ வளர்த்து அதில் இறங்குகிறாள். தீக்கடவுளே நேரில் சீதையைக் கையில் ஏந்தி சீதை மாசற்றவள் என்று கூறுகிறான். சீதையை ஏற்றுக் கொள்ளும்படி நான்முகனே நேரில் வந்து இராமனிடம் கூறுகிறான்.