பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sthusät - 2G sagstrut unismeu -so efsofourssär 9| சின்னமாகப் போற்றி வளர்க்கப் பட்டிருக்கிறது. நாகரிக வளர்ச்சி ஏற்பட்டு அரசுகள் தோன்றி மன்னராட்சி முறை வலுவடைந்த போது மகாவிஷ்ணு வழிபாடு அதிகப்பட்டு அந்த மகாவிஷ்ணுவே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக நிலை பெறப்பல இலக்கியங்களும் பேரிலக்கியங்களும் தோன்றி அவை மக்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. ஒரு பக்கம் புத்தமும் சமணமும் வலுப்பெற்று வேதக் கருத்துக்களுக்கு வேத கால வழிபாடுகளுக்கும் சவால் விட்டபோது தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு வேத சமயங்கள் முயன்றிருக்கின்றன. அதற்கு ஆயுதபலமும் அவசியப்பட்டிருக்கிறது. ஆயுத பலத்தின் சின்னங்களாக வீரர்களும் மாவீரர்களும் மன்னர்களும் அவர்களின் சாயலாகத் திருமாலும் முன்னணிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அப்போது சிவ சக்தி மட்டும் போதவில்லை. ஆதிசங்கரர் ஆறுவகைச் சமய வழிபாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் ஒன்றிணைத்தார். அத்தகைய சக்திகளுக்கெல்லாம் மேலானதான சிறப்பானதொரு சக்தியாக “ஓம் நமோ நாராயணாய”என்னும் மகா மந்திர சக்தியான திருமால் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பெரும்பாலும் அசுரசக்தியை அரக்க சக்திகளை வென்றதாகவே கதைகளில் காட்டப் பட்டிருக்கின்றன. அவதாரக் கதைகள் மட்டும் போதாமையால் மன்னராட்சி கால அறிஞர்கள் பலரும் மன்னர்களை மய்யமாக வைத்து பல புராணங்களையும் இரு இதிகாசங்களையும் படைத்திருக்கிறார்கள். அவ்வாறாக இராமாயணமும், மகாபாரதமும் தோன்றின. இந்த இரு இதிகாசங்களிலும் மகாவிஷ்ணுவின் அவதாரச் சிறப்புகளே முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இராம பிரானுடைய அயோத்தியும், கண்ணபிரானுடைய மதுராவும் அவர்களுடைய இதர அருஞ்செயல்கள் பலவற்றிலும் சிந்து கங்கை சமவெளிப் பகுதிகளே முக்கிய களங்களாக விருந்திருக்கின்றன. ஆயினும் இராமன் இலங்கை வரை வந்து சென்றதும், மகாபாரதப் போரில் தென்னாட்டு மன்னர்கள் உள்பட ஐம்பத்தாறு நாட்டு அரசர்களும் பங்கு கொண்டதும் இரு இதிகாசங்களும் பாரதநாடு முழுவதினுடைய அனைவருக்குமுரிய பேரிலக்கியங்களாக மக்களுடைய உள்ளங்களில் இடம் பெற்று நிலை கொண்டிருக்கின்றன.