பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. sub-gyeo–u st–eau - Genereosuutb suous Glæreneosuute 92 ஒரு பக்கம் சைவமும் வைணவமும் தங்களுக்கிடையில் முரண்பட்டு மோதிக் கொண்ட போதிலும் வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் ஆகமங்களுக்கும் எதிரான பெளத்த சமணக் கருத்துக்களை சைவமும் வைணவமும் சேர்ந்து நின்றே எதிர்க்க வேண்டியதாயிற்று. அதற்காக சிவவிஷ்ணு ஒற்றுமையையும் கொண்டு வந்தனர். சங்கர நாராயணர்கள் மக்களுடைய மனதில் இடம் பெற்றார்கள். பிற்காலத்தில் இந்திய வழிபாட்டு முறைகள் அனைத்தையும் ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இராமாயணக் கதையில் வரும் இராமபிரான் திருமாலின் அவதாரமாகவும் இராவணன் சிறந்த சிவபக்தனாகவும் போற்றப் பட்டிருக்கிறார்கள். சிறந்த சிவ பக்தனான இராவணனை இராமன் வென்றான். மிதிலையிலிருந்த சிவதனுசை இராமன் எடுத்து வளைத்து முறித்தான். பரசுராமனிடமிருந்து வல்லமை மிக்க விஷ்ணு தனுசை இராமன் பெற்றுக் கொண்டான் என்றெல்லாம் இராமாயணக் காவியத்தின் கதை நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். கம்பன் தனது இராமாவதாரக் கதையில் முழு முதல் காரணனாகத் திருமாலையும், அத்திருமாலின் அவதாரமாக இராமபிரானையும் காட்டுகிறார். அத்துடன் அரனுக்கும் அரிக்குமான ஒற்றுமைக் கருத்துக்களையும் கொண்டு வருகிறார். கடைசியில் சிவபெருமானே வந்து திருமாலைப் போற்றுவதாகக் குறிப்பிடுகிறார். . இராமபிரானும் சிவலிங்கத்தை உருவாக்கி இராமேஸ்வரத்தை நிர்மாணித்து லிங்க பூசை செய்தது பற்றியும் சேதுவின் சிறப்பு பற்றியும் கம்பன் எடுத்துக் கூறுகிறார். கம்பன் இந்த ஒற்றுமைக்குக் குரல் கொடுப்பதுடன் சமயச் சண்டைகள் சமய வேறுபாடுகள், முரண்பாடுகள் பிணக்குகள் மோதல்கள் வேண்டாமென்றும் மிக வலுவாக எடுத்துக் கூறுகிறார். கம்பன் தனது காவியத்தில் கடவுள் வழிபாட்டைத் தத்துவ நிலைக்கு உயர்த்துகிறார். பஞ்ச பூத சக்திகளைத் தனது தத்துவ ஞானக் கருத்துக்களின் அங்கக் கூறுகளாகச் சிறப்பித்துக் காட்டுகிறார். கடவுள் ஒன்றாயினும் சரி பலவாயினும் சரி, ஆம் என்றாலும் சரி இல்லையென்றாலும் சரி நமக்குள் அதில் பிணக்குகள் வேண்டாம், சண்டைகள் வேண்டாம் என்னும் கருத்தையும் சமய