பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. အမြားႏိုင္တစ္ၿ Longol–(Upup. 95 அதர்மம் மேலோங்கும் போது நானே என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன். அறத்தை நிலை நாட்ட நான் யுகந்தோறும் பிறக்கிறேன், என்று கண்ணன் கூறுவதாகவே கீதை குறிப்பிடுகிறது. இந்த வாசகங்களில் கடவுளே அவசியமான சில அரிய செயல்களைச் செய்து முடிப்பதற்கு மனிதனாகப் பிறந்துதான் அதை நிறை வேற்ற வேண்டியதிருக்கிறதென்னுங் கருத்து மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. எனவே இங்கு மனிதப் பிறவிக்கு முக்கியக் கடமையிருப்பது வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இந்த வழியில்தான் கம்பன் இராமனுடைய மானிடப் பிறப்பைச் சிறப்பித்துக் கூறுகிறார் என்பதை அறிகிறோம். 'அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி தீயோர் இறந்து உகநூறித் தக்கோர் இடர் துடைத்து бT&5 ஈண்டுப் பிறந்தனன் என்றும் அனுமன் வாயால் கம்பன் கவிதை தெரிவின்தயும் காண்கிறோம். கம்பன் மானுடத்தின் சிறப்பைத் தனது கதைப் போக்கில் குறிப்பிடும் போது மானிடப் பிறப்பின் உயர்வை எடுத்துக் கூறுகிறார். மனிதன், மனிதப் பிறப்பு, மனித சக்தி, மனித ஆற்றல், மானுடம், மானுடத்தின் வெற்றி ஆகியவைகளைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார். அதைப் பல இடங்களிலும் தனது மகா காவியத்தில் கம்பன் சுட்டிக் காட்டுவதையும் காணலாம். இராமாயணக் கதையில் அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய அரசியல் மையங்கள் களங்களாக அமைந்துள்ளன. இந்த மூன்று நாடுகளிலும், இந்த மூன்று அரசுகளின் கீழிலும் வாழ்ந்தவர்கள் மனிதர்களேயெனினும் சமுதாய வளர்ச்சி நிலையிலும், பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் நடையுடை பாவனைகளிலும் எண்ணங்கள், மனோபாவங்கள், சிந்தனைப் போக்குகள் முதலிய வற்றிலும், கல்வி, கலாச்சாரம், அறிவாற்றல், செல்வச் செழிப்பு,