பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 96 வாழ்க்கை வழி முறை, அறநெறி,ஒழுக்க நெறி, முறைகள் பழக்க வழக்கங்கள் முதலிய வற்றிலும் மாறு பட்டவர்களாகவும், வேறு பட்டவர்களாகவும், வேறுபட்ட வளர்ச்சிப் படிகளைக் கொண்டவர்களாகவும் இருந்தார்களென்பதைக் கம்பனுடைய காவியத்தில் காண முடிகிறது. அயோத்தியர்கள் மானிடர்களென்றும், கிட்கிந்தையர்கள் வானரர் (விலங்கினருக் கினையானவர்கள்) களென்றும், இலங்கையர்கள் அரக்கர்களென்றும் கவிஞனால் விவரிக்கப் பட்டிருக்கிறார்கள். சில அறிவாளிகள் அல்லது நன்கு கற்றறிந்தவர்கள், வேத நன்னூல்கள் பலவற்றையும் நன்கு படித்த முனிவர்கள், தவத்தில் சிறந்த ஞானிகள் முதலிய அறிஞர் பெருமக்கள் பலரும், நாகரிகத்திலும் பண்பாட்டிலும் அறிவுத்துறையிலும் அறவழியிலும் சிறந்த மேலான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மனிதர்களென்றும், செல்வச் செழிப்பும், வல்லமையும் மிகுந்த ஆற்றலும் பெற்று மறவழியில் நிற்பவர்களை அரக்கர்களென்றும், போதுமான வளர்ச்சி பெறாத மக்கள் சமுதாயத்தினர்களை விலங்கினங்களுக்கீடான நாகரிக வளர்ச்சியையெட்டாத மக்கள் என்றும் வகைப் படுத்தி இலக்கியங்களில் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. மேலும், வளர்ச்சியடைந்த மக்கள் மற்றவர்களைக் குறையாக நாகரிக வளர்ச்சியில்லாதவர்களாகக் கருதுவதும் பழக்கமாக இருந்து வந்துள்ளது. உதாரணமாக, மேலை நாட்டார் ஆசிய ஆப்பிரிக்க மக்களையும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய மக்களையும் அமெரிக்க வெள்ளையர்கள் அமெரிக்கக் கருப்பு இன மக்களையும், நாகரிகக் குறைவானவர்களாகவும், காட்டுமிராண்டிகளுக்கீடாகவும், விலங்குகளுக்கீடாகவும் கருதினார்களென்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். அதேபோல இந்திய நாட்டில் சாதிப் பிரிவுகளை வைத்து வேறுபாடுகள் காட்டிப் பல பகுதி மக்கள் கீழ் நிலை மக்களாகப் பாகுபடுத்தப்பட்டார்களென்பதும் அனைவரும் அறிந்த செய்தி. இந்திய சமுதாயத்திலிருந்த பாகுபாடுகளின் சூழ்நிலையில் கம்பன் நெடிது நோக்கிய சிந்ததிையுடன் சிறந்த மனிதத்வத்தை மானுடம் என்னும் சொல்லின் மூலம் உயர்ந்த பல கருத்துக்களையும்