பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. $ibug'ub uongo-qpib. 97 அரிய செயல்களையும் மிகவும் சிறந்த முறையில் எடுத்துக் கூறியுள்ளதைக் காண்கிறோம். கலைக்கோட்டு முனிவர் என்பவர் தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர். அவரை அயோத்திக்கு அழைத்து வந்து, தசரதனுக்குப் புத்திரரில்லாக் குறையைத் தீர்க்க புத்திர காமேஷ்டியாகம் என்னும் ஒரு வேள்வியை செய்ய ஏற்பாடு நடை பெறுகிறது. இந்தக் கலைக்கோட்டு முனிவன் யார்? ஒரு சமயம் அங்க நாட்டில் நெடுங்காலமாக மழையில்லாமல் வறட்சி அதிகமாகிப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெருந்துயர மடைந்திருந்தார்கள். அப்போது கலைக் கோட்டு முனிவரை அழைத்து வந்து தானம் கொடுத்தால் மழை பெய்யும் எனச் சில அமைச்சர்கள் ஆலோசனை கூற, அம்முனிவரையழைத்து வர என்ன செய்வதென மன்னன் கேட்கிறான் அது பற்றிக் கம்பன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “ஒத நெடுங்கடல் ஆடையுலகினில் வாழ் மனிதர் விலங்கெனவே உன்னும் கோதில் குணத் தருந்தவனைக் கொணரும் வகையாவது?” என்பது கம்பரது பாடலாகும். கம்பருடைய இந்த வாசகங்களில் தவத்திற் சிறந்தோர் சிலர் இந்தவுலகில் வாழும் மனிதர்களை விலங்கென மதிக்குங் கருத்துடையோரென்று நல்ல நோக்கத்தில் தான் குறிப்பிடுகிறார் என்றாலும், சில பெரிய மனிதர்கள் சாதாரண மக்களை விலங்குகள் போல் கருதும் ஒரு உண்மை வெளிப்படுகிறது. இங்கு மனிதர் என கம்பன் குறிப்பிடும்போது இந்தக் கடல் சூழ்ந்த உலகினில் வாழும் மனிதர் எனப் பொதுப்படையாகக் குறிப்பிடுவது கவனிக்கத் தககது. விஸ்வாமித்திரப் பெருமுனரிவர் தனது வேள்வியைக் காக்கத் தசரதனிடம் அனுமதி பெற்று இராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார். வேள்வி முடிந்த பின்னர் முனிவர் அவர்களிருவரையும் மிதிலை நகருக்கு அழைத்து வருகிறார். சீதையை மணக்க நிபந்தனையாக விருந்த வில்லை இராமன்