பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. stol gyp longol–(pp. 99 சிவனும் அரி அயனும் அவர் சிறு மானிடர் பொருளோ இவனும் எனது உயிரும் உணதபயம் இனி யென்றான்.” தசரதன் தன்னையும் இராமனையும் பற்றிச் சிறுமானிடர் என்று குறிப்பிட்டுத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறான். பரசுராமன் மிகுந்த வல்லமை மிக்கவன். ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்றவன். அவனுடைய பெயரைக் கேட்டாலே அரசர்களுக்கு அச்சம், சிம்ம சொப்பனம். அப்படிப்பட்ட வல்லவனுக்குத் தசரதன் இராமனைப் போன்ற சிறு மானுடர் ஒரு பொருட்டல்ல என்னும் பொருளில் தசரதன் கூற்றாகக் கம்பன் நயமாகக் குறிப்பிடுகிறார். “உரியாரிடை யல்லால் எளியாரிடை வலியார் வலி யென்ன வாவது?” என்னும் பொருளில் பரசுராமன் முன்பு இராமனை எளியவனாக தசரதன் கூறுவதாக இங்கு காட்டப்பட்டிருக்கிறது. இங்கு கம்பனுடைய காவியத்தின் கதைத்திறன் வெளிப்படுகிறது. இராமனைச் சிறுமானிடன் என்று தொடங்கி வல்லமை மிக்க பரசுராமனின் வில்லையும் வாங்கி வளைத்து, அதில் நாணையும் பூட்டி இராமன் என்னும் மானுடன் பரசுராமனின் தவத்தையும் தனது அம்பிற்கு இலக்காக்கி அதை வாரிக் கொண்டு வெற்றி கண்டதை மிகவும் நயமாகக் கம்பன் தனது குறிகளால் காட்டுகிறார். H. பஞ்சவடி இராமனும் சீதையும் இலக்குவனும் பஞ்சவடியில் குடில் அமைத்துத் தங்கியிருக்கிறார்கள். அங்கு சூர்ப்பனகை இராமனையும், இலக்குவனையும் காண்கிறாள். காமவசப் படுகிறாள். அவர்களை அணுகித் தனக்கு இணங்குமாறு நிர்ப்பந்தப்படுத்த முயலுகிறாள். இலக்குவன் அவளுடைய மூக்கையும் காதுகளையும் முலைக்காம்புகளையும் அறுத்து மானபங்கப் படுத்தி விரட்டி விடுகிறான். சூர்ப்பணகை அவமானப்பட்டு அழுகிறாள், புலம்புகிறாள். தனது அண்ணன்மார்களான கரதுடனர்கள், இராவணன் கும்பகர்ணன் மருமகன் இந்திரசித்தன் ஆகியோரை வேண்டிப் புலம்புகிறாள்.