பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சினிவாசன் |(}() இந்த மானிடர்களை அடக்கி ஒடுக்க மாட்டீர்களாவென்று அழுகிறாள். கம்பன் தனது கவிதை வரிகளில் மிகவும் அழகாக அதை விரித்துக் கூறுகிறார். அந்தக் கவிதை வரிகள் மிகச் சிறந்த இலக்கிய நயம் கொண்ட புலம்பல்களாக அமைந்துள்ளன. “காற்றினையும் புனலினையும் கனலினையும் கடுங்காலக் கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கோடற்கு ஆற்றினைநீ ஈண்டிருவர் மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினை யோ உன் வலத்தைச் சிவன் தடக்கை வாள் கொண்டாய்” என்று புலம்பி அரக்கி அழுகிறாள். காற்றையும் நீரையும் நெருப்பையும் கடலையும் காலனையும் விண்ணையும் நவக்கிரகங்களையும் நட்சத்திரங்களையும் அடக்கி ஒடுக்கி அவைகள் உனக்கு சேவை செய்ய ஏவினாய். அத்தகைய ஆற்றலும் வலிமையுமுள்ள நீ சிவனிடமே வரமும் வாளும் பெற்ற நீ, இந்த இரு மானுடர்களுக்கு ஆற்றாமல் போனாயோ வென்றும், 'உருப்பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் செருப்படியின் பொடி யொவ்வா மானுடரைச் சிறுதியோ நெருப்படியில் பொடி சிதற நிறைந்த மதத்திசை யானை மருப் பொடியர் பொருப்பிடியத் தோள் நிமிர்த்த வலியோனே!” தீப்பொறி பறக்க மத யானைகளின் தந்தங்கள் ஒடிய மலைகளையும் கற்களையும் துாள்துள்ளாக நொறுக்கும் தோள்