பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. *p sono uorgny-opp. |0| வலிமை கொண்ட வல்லவனே உன் கால்த்துசிக்குக்கூடச் சமமாக இல்லாத இந்த மானுடரைச் சும்மா விடுவாயோ வென்றும், “ஊனுடைய உடம்பினராய் எம் குலத்தோர்க் குணவாய மானுடவர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலியம்மா? நம் குலத்திற்கு வெறும் உணவாகப் பயன் படும்” ஊனுடைய உடம்பைக் கொண்ட மாண்டவருக்காக உங்கள் வலிமை ஒளிந்து கொண்டதாவென்றும் பலவாராக அழுது புலம்புகிறாள். தனது அண்ணன் மகனும் தனது மருமகனுமான இந்திரஜித்தனை அழைத்துப் புலம்புகிறாள் “ஒரு காலத்துலகேழும் உருத் தெரிய தனுவொன்றால் திருகாத சினம் திருகித் திசை யனைத்தும் செலநூறி இருகாலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த மருகாவோ, மருகாவோ மானுடர் வலி காண வாராயோ' என்றும் பலவாறாக அழுது புலம்பிக் கொண்டு எல்லாம் வல்ல இந்திர சித்தனே யிந்த மானுடரை அடக்கி யொடுக்க வரமாட்டாயா வென அரக்கி அலறுவதைக் கம்பன் தனது அற்புதமான வசனங்களில் சுட்டிக் காட்டுகிறார். a மானுடரை வெல்லத் தனது அரக்கர் குலத்தோரைச் சூர்ப்பணகை அழைப்பதாகக் கம்பன் இங்கே கூறும் போது அரக்கர்களின் பலம் வல்லமை, ஆற்றல் மிகுதிகளை யெடுத்துக் கூறி அத்தகைய வல்லவர்களுக்கு மானுடர் ஒரு பொருட்டா, அவர்களுடைய வலியை யொடுக்க வர மாட்டீர்களா வெனக் கூறும் போது மானுடத்தின் சக்தியையும் ஒப்பிட்டுக் காட்டுவது போல் காணப்படுகிறது. மீண்டும் சூர்ப்பணகையின் சொற்களில், "இருவர் மானிடர் தாபதர் ஏந்திய வரிவில் வாள்கையர் மன்மதன் மேனியர்