பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sub-god Uongol–(pub. 103 கர, தூடணர்களும் அவர்களுடைய படைகளும் அழிந்த பின்னர், சூர்ப்பனகை இராவணனிடம் ஒடி முறையிடுகிறாள். சூர்ப்பனகையின் அறுபட்ட மூக்கையும், காதுகளையும், பார்த்த இராவணன் இது யார் செயல்” எனக் கேட்ட போது அவள் கூறியதான சொற்கள், "கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் மீனுடை நெடுங் கொடியினோன் அனையர் மேல் கீழ் ஊன் உடை உடம்புடை மையோர் உவமையில்லா மானிடர் தடிந்தனர் கள் வாள் உருவி என்றாள்” என்று கூறிய சூர்ப்பனகையின் பதிலைக் கேட்ட இராவணன் "செய்தனர் மானிடர் எனத் திசை யனைத்தும் எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் நொய் தவர் வரித் தொழில் நுவன்ற மொழி ஒன்றோ பொய் தவிர் பயத்தை ஒழி’ புக்க புகல் என்றான்” இவ்வாறு இராவணன் கேட்க, மீண்டும் இராம இலக்குவர்களின் சிறப்புகளையெல்லாம், “மன்மதனை யொத்த அழகுடையவர்கள், மேருமலையை யொப்ப தோள் வலி கொண்டவர்கள்” என்றும் “சந்திரனைப் போன்ற அழகு முகங்களைக் கொண்டவர்கள்” என்றும் “வற்கலையர், வாழ்கழலர், மார்பின் அணிநூலர், விற்கலையர், வேதம் உரைநாவர், நனிமெய்யர், உற்கு அலையர், உன்னை ஒர்துகள் துணையும் உன்னார் சொல்கலை எனத் தொலைவில் துணிகள் சுமந்தார், மாரர் உளரே, இருவர் அவர் வீரர், வில்லதனில் வல்லார்” என்றெல்லாம் மானுடர் இருவரின் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான புற அழகினையும் அக அழகினையும் வீரத்தையும் அவர்களுடைய ஆயுதங்களின் வலிமையையும் மற்றும் இதர சிறப்புகளையுமெல்லாம் சூர்ப்பனகை தனது மூத்த அண்ணன் இராவணனிடம் விளக்கமாக எடுத்துக் கூறுகிறாள்.