பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 104 இதைக்கேட்ட இராவணன் “மருந்தனைய தங்கை மணி நாசி வடி வாளால் அரிந்தவரும் மானிடர் அரிந்தும் உயிர் வாழ்வார்” என, இதைக்கேட்டுக் கொண்டும் நான் சும்மா இருக்கிறேனே என்று தன்னையே பழித்துக் கொள்கிறான். இராமன் மீது மையல் கொண்ட சூர்ப்பனகை தனக்கு இராமன் கிடைக்க வேண்டுமானால் சீதை ஒழிய வேண்டும் என்னும் சிந்தனையில் இராவணனிடம் சீதையின் அழகைச் சித்தரித்து அவள் மீது இராவணனுக்கு ஆசையை உண்டாக்குகிறாள். சூர்ப்பனகை, சீதையின் பேரழகைப் பற்றிப் பலவாறாக விவரித்துக் கூறுகிறாள். கம்பன் கவிதைகள் சீதையின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. “வில்லொக்கும் நுதல் என்றாலும் வேலொக்கும் விழியென்றாலும் பல்லொக்கும் முத்தென்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் சொல்லொக்கும் பொருளொவ்வாதால் சொல்லல் ஆம் உவமையுண்டோ நெல்ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத் தாக வற்றோ?” என்று சீதையின் அழகை விவரித்துக் கூறி இராவணனுடைய காமத் தீயிற்கு நெய் ஊற்றுகிறாள்.'அந்த அழகிய சீதை உனக்கேயுரியவள்” என்றும் மேலும் அவனுடைய ஆசையைத் துண்டுகிறாள். சூர்ப்பனகை கூறிய விவரங்களைக் கேட்டபோது இராவணனுக்குச் சீதை மீது அளவற்ற ஆசை மேலிட்டது. எல்லா வற்றையும் மறந்தான். “கர துடணர்கள் அழிந்ததை மறந்தான். தன் தங்கை மூக்கறு பட்டதையும் மறந்தான்” என்று கம்பன் குறிப்பிடுகிறார். எப்படியும் சீதையை அடைய வேண்டும் என்று அதற்கான திட்டங்களைத் தீட்டினான். தனது மாமனான மாரீசனிடம் சென்றான். அவனிடம் இராவணன் இவ்வாறு கூறுகிறான்.