பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ғыousфке потеноре. 107 என்று “அந்த மானிடர் யாரென்று நினைத்தாய், அவர் முத்தேவரின் மூலமுதற்பொருளாகும்” என்று இராவணனுக்குச் சடாயு எச்சரிக்கை செய்கிறான். இங்கு மானிடர் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார்கள். ம்ானிடரில் இம்மானிடர் என்று இராமனைக் குறிப்பிட்டுச் சடாயு கூறுவதைக் கம்பன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகை, கரதுடனர்கள், இராவணன் முதலியோர் மானிடரை இழித்தும் குறைத்தும் கூறுவதைக் கம்பன் தனது கதையோட்டத்தில் மிகவும் சூட்சுமமாக எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். இதில் சூர்ப்பனகையின் பேச்சிலும், கரதுடனர்களின் கூற்றிலும், இராவணனுடைய குறிப்பிலும் மானிடர்களைப் பற்றி வேறுபட்ட கோணங்களில் குறிப்பிடுவதைக் காணலாம். சூர்ப்பனகை, இராமனையும் இலக்குவனையும் வெறும் மானிடர்களாக மட்டும் காணவில்லை. தனது ஒரு தலைக் காதலுக்கு வேண்டியவர்களாகக் காண்கிறாள். எனவே அம்மானிட வீரர்களின் அழகும் ஆற்றலும் அவளுடைய உள்ளத்தை உலுக்குகிறது. தனது ஆசை நிறைவேறாமல் போய்விட்ட ஆத்திரத்திலும் கூட இராமனின் அழகையும் ஆற்றலையும் இணைத்தே அவர்களை மானிடக் குறிப்பில் கூறுகிறாள். கரதுTடணர்களோ, தங்கள் அரக்க குணமும் தொழிலும் தவிர வேறு எதுவும் அறியாத முரடர்கள். எனவே மானிடர் என்று அற்பமான முறையிலேயே குறிப்பிட்டுக் கடைசியில் அம்மானிடர் கைகளால் அடிப்பட்டு மாண்டு மடிகிறார்கள் இராவணனுடைய நிலை கம்iர நிலை. பொதுவாக அவன் எல்லா சக்திகளையும் வென்றவன். யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவன். முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவத்தின் பலனும் பெற்றவன். தனது இணையற்ற வீர சூரத் தன்மையிலிருந்து மானிடரைக் குறைத்து மதிப்பிடுகிறான், என்றாலும் இராம இலக்குவர்களைப் பற்றி ஒரளவு அறிந்தே வஞ்சத்தால் சீதையைக் கவர்ந்து கொண்டு சென்றான். ஆயினும் தனது வீண் பெருமையை விட்டுக் கொடுக்காமல் இராவணன் தனது தன்னகங்கார நிலையிலிருந்து மானிடர் என்று துச்சமாகப் பேசுகிறான். இந்த நிலையில் சடாயு இராம இலக்குவர்களைப்