பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 108 பற்றிக் குறிப்பிடும் போது இந்த மானிடர் என்று குறிப்பிட்டு முத்தேவரின் மூலமுதற் பொருளாகும் இம்மானிடர் என்று இராவணனுக்கு அறிவில் படும்படி குறிப்பிடுகிறார். ஆயினும் இராவணனுடைய அறிவில் அது உறைக்கவில்லை. காம நோய் காரணமாகவும், விதியின் வலியினாலும், இலங்கை நகருக்கு ஏற்பட வேண்டிய தீமைகளுக்கான காலம் நெருங்கி விட்ட காரணத்தாலும் அவனுடைய அறிவு மழுங்கிப் போயிருந்தது. நாசகாலத்தின் விபரீத புத்தி வலுவாக நின்றது. கிட்கிந்தா காண்டம் சீதையைத் தேடி கொண்டு இராமனும் இலக்குவனும் சவிரி குறிப்பிட்டுக் கூறிய மலையை நோக்கிச் செல்கின்றனர். அம்மலையிலிருந்த சுக்கிரீவனும், அனுமனும் இவர்களை வெகு தொலைவில் நின்று பார்க்கிறார்கள். இவர்களை யார் என்று அனுமன் சிந்திக்கிறான். “சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் தெரு மரலின் நொந்து அயர்த்தனர் அனையர் நோ உறச்சிறியர் அலர் அந்தரத்து அமரர் அலர், மானுடப் படிவர், மயர் சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறுநிலையர்' என்று மாருதி, மானுட வடிவில் வந்துள்ள இவர்கள் யாரென சிந்திக்கிறான். பிரம்மச்சாரி வேடத்தில் அவர்களுக்கருகில் செல்கிறான். அனுமனுடன் உரையாடல் நடை பெறுகிறது. இது ஒரு அற்புதமான காட்சி, இராமன் மாருதியைப் பாராட்டுகிறான். எல்லாக் கலைகளையும் அறிந்தவனாக வேதக் கடலாகச் தோன்றும், அடக்கத்தின் வடிவமான இந்த சொல்லின் செல்வன் யார் என்று இராமன் சிந்திக்கிறான். உரையாடல் தொடருகிறது. இருவரும் தங்கள் தங்கள் கதைகளைப் பரஸ்பரம் கூறிக் கொள்கின்றனர். நட்புக் கொள்கின்றனர். சுக்கிரீவன் இராமனை அடைகிறான். “தேறினன் அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறி இப்பிறப்பில் வந்தார் மானிடராகி மன்னோ