பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sub-gote Uongol–(Pte. |09 ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்றிவர் களாதி வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றது அன்றே” - தாடதைவதம்,மிதிலையில் சிவதனுசை எடுத்ததும் முறித்ததும், பரச்ராமனிடம் விஷ்ணுதனுசையும் அவனுடைய தவ வலிமையையும் வாங்கியது, முதல் கரதுTடனர்களை வதம் செய்தது வரையிலும் இராமபிரான் மனித வடிவத்திலிருந்து ஆற்றிய அருஞ்செயல்கள் அனைத்தையும் கேட்டு வியந்து சுக் கிரீவன் இவ்வா குறிப்பிடுகிறான். இயற்கை # ႏိုင္ငံႏိုင္တူ வலிமையையும், அரக்கர்களின் வீர சூxiங்களையும் வென்று, குகனையும், வானரர்களையும் அன்பினால் அரவணைத்து தேவர்களை யெல்லாம் தனக்குச் சாதகமாக்கி, சாபம்' பெற்றவர்களுக்கெல்லாம் விமோசனமளித்து, சடாயுவின் ஆசியைப் பெற்று மானுடம் வெற்றி பெற்றுள்ளதாக “வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றது அன்றே” என்னும் ஒரு அபூர்வமான கருத்தைச் சுக்கிரீவன் வாயால் கம்பன் மிகவும் அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார். இராமாவதாரக் கதையில் மானுடம் ஆற்ற வேண்டிய அருஞ் செயல்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன. எனினும் அந்த சக்திகளையும் இந்த மனிதர்கள் வெல்வார்கள் என்னும் நம்பிக்கையில் முன் கூட்டியே சுக்கீரீவன் வாயால் கம்பன் எடுத்துக் கூறுவது சிறப்பு மிக்க இலக்கிய நயமும் மனிதனையுயர்த்தும் மேலான தொரு தத்துவமுமாகும். வாலி மீது மறைந்து நின்று இராமன் தனது அம்பினை எய்தான். வாலி தனது உடலின் மீது பாய்ந்திருக்கும் அம்பை இழுத்துப் பார்த்த போது அது இராமனுடைய அம்பு எனத் தெரிந்து இராமனை முதலில் நிந்தனை செய்கிறான். வாலிக்கும் இராமனுக்கும் ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. இராமாயணக் காவியத்தில் இந்த வாக்குவாதக் காட்சி ஒரு அபூர்வமான அற்புதமான காட்சியாகும். அக்காட்சியைக் கம்பன் மிகச் சிறந்த முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இராமன் வாலியினிடத்தில் ஒழுக்கம் நீதிநெறி, தருமம் பற்றி யெல்லாம் பேசுகிறான். “விலங்கினத்திற்கு மனம் போனபோக்கில் உள்ள வாழ்க்கையல்லாமல் மறைநெறியும் குல மொத்த குணமும்