பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் | 12 என்று அனுமனைக் கேட்டான் குரங்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும் இருக்கட்டும், இந்த இலங்கை நகருக்குள் துTதனாக வந்து அரக்கரைக் கொன்ற காரணம் என்னடா என்று மாருதியைப் பார்த்து இராவணன் அதட்டுகிறான். மனிதரின் ஆட்சி முறையில் துரதன் வந்து இப்படிக் கொலை பாதகமும் குரங்கு அட்டகாசமும் செய்யலாமா எனக் கேட்பது போலிருக்கிறது. இராவணன் வாயால் கம்பன் கேட்கும் கேள்வி. எனினும் குரங்குச் சேட்டை என்பதில் மாருதியும் விதி விலக்கில்லை போலும். இருப்பினும் இராவணன் கேள்விக்கு “ என்னைக் கொல்ல வந்தார்களைக் கொன்றேன்” என்று அனுமன் பதிலளித்தான். யுத்த காண்டம் மாருதி தனது வாலிலிட்ட நெருப்பைக் கொண்டு இலங்கையை எளித்து விட்டுத் தப்பியோடி விட்டான். இராவணன் தனது சபையைக் கூட்டி மந்திராலோசனை நடத்தித் தனக்கு நெருக்கமானவர்களின் கருத்துக்களைக் கேட்டான். “கட்டது குரங்கு எரி சூறை யாடிடக் கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்ததெங்கணும் இட்ட இவ்வரியணை இருந்தது என் உடல்” குரங்கு கட்டது. அந்தத் தீ நமது நகரைச் சூரையாடியது. நமது சுற்றத்தார் பலரும் நண்பர்கள் பலரும் மாண்டனர். நகரைத் துன்பம் சூழ்ந்தது. நான் இந்த அரியணையில் சும்மா இருந்தேன். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் அந்தக் குரங்கைக் கொன்றோம் என்னும் பெயர் கூட இல்லாமல் அதுவும் தப்பிவிட்டது. நமக்கு தீராப் பழியும் அவமானமும் வந்து சேர்ந்தது. இனி என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று இலங்கையரசன் தனது நெருக்கமான உறவினர்களைக் கொண்ட சபையோரைக் கேட்டான். சபை அரசனுக்கு மிகவும் நெருக்கமானவர்களையும் மிகவும் முக்கியமானவர்களையும் கொண்டதாக விருந்தது. சபையிலிருந்த