பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் | 16 மனிதர்களை யெதிர்த்து வெற்றி பெறுவதற்கான வரத்தை நாம் பெறவில்லையென்றும், நமது வினையின் விளைவாக இவர்கள் மனிதர்களாக வந்து நிற்கிறார்களென்றும் ஜானகியை விட்டு விடுங்களென்றும் நமது இசையும் செல்வமும் உயர் குலத்தியற்கையும் எஞ்சி நிற்க வசையும் கீழ்மையும் மிஞ்சி கிளையோடு மடியாமல் அவளை விட்டு விடுவதே மேலென்றும் வீடணன் தெளிவுப்படக் கூறி முடித்தான். இராவணன் கடுங் கோபங்கொண்டு சீறுகிறான். எனது பெருவிரலைக் கொச்சை மானுடர் வெல்வரென்றும் மானுடப் புழுக்களுக்கெதிராக நம்மிடம் வரமில்லையென்றும் மானுடர் வலியரென்றும் கூறுகிறாய். வாலியை அம்மானுடனும் மறைந்து நின்றே கொன்றானென்றும் எல்லாவற்றையுமிழந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மானுடர்களின் வலிமையை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டுமென்றும் கூறி வீடணனைக் கடுமையாகத் தாக்கிப்பேசி அவனுக்கு பதிலளித்தான். “மீண்டும் வீடணன் எழுந்து தன்னின் முன்னிய பொருளிலா ஒரு தனித் தலைவன் அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான்” என்று கூறி இரணியன் வரலாற்றையும் எடுத்துக் காட்டி அறிவுரை கூறுகிறான். வேறு பல அறிவுரைகளையும் கூறி இராவணனைத் திருத்த முயலுகிறான். ஆனால் இராவணனோ கடும் சினம் கொண்டு பேசி வீடணனை விரட்டுகிறான். “நண்ணின மனிதர் பால் நண்பு பூண்டனை எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை திண்ணிது உன்செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ? ” என்றும் “அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை தஞ்சென மனிதர் பால் வைத்த சார்பினை வஞ்சனை மனத்தினை பிறப்பு மாற்றினை நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?”