பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 118 “உறுபகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் வெறுவிது நம் தம் வீரம்” என்று கூறி அரக்கர் படை இலக்குவனை எதிர்கொண்டன. “கொல்வென் இக்கணமே மற்று இவ்வானரக் குழுவை வெல்வென் மானுடர் இருவரை எனச்சினம் வீங்க வல்வன் வார் சிலை பத்துடன் இடக்கையின் வாங்கித் தொல்வன் மாரியில் தொடர்வன சுடுசரம் துரந்தான்.” இராவணன் கடுமையாகப் போர் செய்தான். வானரத் தலைவர்களும் கலங்கினர். அவர்களுடைய படைகளும் சிதறுண்டன. இலக்குவன் தலையிட்டு இராவணனை எதிர்த்தான். இருமானுடரையும் வெல்வேன் என்று சூளுரைத்து இராவணன் சீறினான். மிகுந்த வலிமையான நீண்ட விற்களிலிருந்து பெரு மழைப்போல் அம்பு மாரிகளைப் பொழிந்தான் இலக்குவன் வீரத்துடனும் மிக்கதிறனுடனும் விற்போர் நடத்தியதை இராவணனே புகழ்ந்தான். பின்னர் ஒரு சக்தி வாய்ந்த வேல் படையை இலக்குவன் மீது ஏவினான். அப்படை இலக்குவனைக் கடுமையாகத் தாக்கியது. இலக்குவன் தளர்ச்சியடைந்தான். அனுமன் இலக்குவனைத் துக்கிக் கொண்டு சென்று விட்டான். இராமன் அனுமனுடைய தோள்களில் அமர்ந்து கொண்டு போருக்குப் புறப்பட்டான். போர் கடுமையாகவே நடந்தது. இராமன் தனது கணைகளால் இராவணனுடைய வில் தேர்க்குதிரைகள், குடை, கொடி, மார்புக் கவசம் முதலியவைகளையெல்லாம் அழித்தான் மற்றும் ஒர் கணைவிட்டு இராவணனுடைய தலையிலிருந்த பொன்னின் மாமணி மகுடத்தை வீழ்த்தினான். இராவணன் வெறுங்கையுடன் நிராயுத பாணியாக நின்றான் “இன்று அவிந்தது போலும் உன் தீமை, அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமர் கடத்தல் (அரிய போரிலே வெல்லுதல்) மறத்தினால் அரிது” என்று கூறி, " சிறையில் வைத்தவள் தன்னைவிட்டு உலகினில் தேவர்