பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. stol sple tom spi-plo. |19 முறையில் வைத்து, நின்தம்பியை இராக்கதர் முதல் பேர் இறையில்வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் தரையில் வைக்கிலென் நின்தலை வாளியின் தடிந்து ” என்று இராமன் நிபந்தனை விதித்தான். முதல் நாள் போரில் இராவணன் தோல்வியடைந்தான். படையிழந்து முடியும் இழந்து வெறுங்கையுடன் நின்றவனிடம் இராமன் போர் நிறுத்தத்திற்கு நான்கு நிபந்தனைக்களை முன்வைத்தான். 1. சிறையில் வைக்கப்பட்டுள்ள சீதையை விட்டுவிட வேண்டும். 2. தேவர்களைத் தொல்லைப்படுத்தாமல் அவர்களை இருக்க வேண்டிய முறையிலே வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். 3. வீடணனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். அவனுக்கு நீ ஏவல் செய்து வாழ வேண்டும், என்று மானுடன் இராமன் கூறினான். இராவணன் மவுனமாக நின்றான். "ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை, இன்று போய்ப் போருக்கு நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்”. என்பது கம்பனுடைய அழகிய கவிதைவரிகள். முதல் நாள் போரில் மானிடனிடத்தில் தோல்விடைந்த மாவீரன் இராவணன்: “வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற்கேற்ப நயம் படவுரைத்த நாவும்,