பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கம் черне PTSD-(Ple: |2| பின் வாங்குதல் கூடாது”என்றும் புல்நுனிப் பனிநீர் அன்ன மனிதரைப் பொருள் என்று உன்னுவது ஏன்?’ என்றும் கூறி இராவணனை ஊக்குவித்து, கும்பகருணனை எழுப்பிப் போருக்குச் செல்ல ஏற்பாடு செய்கிறான். துங்கிக் கொண்டிருந்த கும்பகருணனை எழுப்பி உணவு கொடுத்துப் போர்க்கோலம் புனைந்தனர். துக்கக் கலக்கத்தில் இருந்த கும்பகர்ணன் தன்னை அலங்கரிப்பது ஏனென்று கேட்கிறான். “வானரப் பெரும் தானையர், மானுடர் கோநகர்ப்புறம் சுற்றினர், கொற்றமும் ஏனையுற்றனர் நீ அவர் இன்னுயிர் போனகத் தொழில் முற்றுதி போய்” என்றான் வானரப்படைகளைக் கொண்டுள்ள மானிடர் நமது நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளனர். தொடக்க வெற்றியும் பெற்றனர். நீ போய் அவர்களைக் கொன்று தின்று வென்றுவா வென்று இராவணன் தன் தம்பியிடம் கூறினான். “இன்னும் நீ சீதையை விட்டுவிடவில்லையா? எனக்கேட்டு அறிவுரை கூறுகிறான் அருமைத் தம்பி கும்பகர்ணன். இராவணன் கோபமடைந்து பலவாறு இடித்துக் கூறி அறிவுரை கேட்பதற்கல்ல உன்னை அழைத்தது, சிறுதொழில் மனிதரைக்கோறிச் செல்வதற்கல்ல உன்னை எழுப்பியது” என்று சினந்து, “மானுடர் இருவரை வணங்கி, மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய்தொழில் ஊனுடை உம்பிக்கும் உனக்கு மேகடன் யானது முடிக்கிலேன் எழுக போகென்றான்” என்று கடிந்து பேசி, எழுந்து போ, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டான். இங்கும் மானுடர் இருவர் என்று குறிப்பிட்டு மானுடரைக் குறைத்தே கூறுகிறான்.