பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sub-god Longol-QPub. 123 ( தனது தம்பியைக் கொன்ற 0789-ಎiegf கொன்று அவர்களுடைய ஈரக்குருதியைக் கொண்டு சீனது தம்பிக்கு நீர்க்கடன் செலுத்தப் போவதாக இராவணன் சூளுரைக்கிறான். இவ்வாறு இராவணன் தனது பேராண்மை நிரம்ப இராமனையும் இலக்குவனையும் மானுடர், மானுடர் என்று இழித்தும் குறைத்தும் கூறிக் கோபம் கொள்கிறான். கம்பனும் இராவணன் தன் மனநிலையில் தோன்றும் கருத்தைத் தெளிவு படுத்தி எடுத்துக்காட்டி அப்படிப் பட்ட மானுடன் முடிவில் வெற்றி பெறுவதைக் காட்ட பல இடங்களிலும் மானிடன் என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுப்பதைக் கணலாம். போரின் தொடர்ச்சியில் பின்னர் இராவணனுடைய மற்றொரு மகன் மகா சூரனான அதிகாயன் போர்க் களம் சென்று அட்டகாசமாகப் போர் செய்து இலக்குவனால் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மாவீரன் இந்திரசித்தன் போருக்குச் சென்று வானரப்படைக்குக் கடுமையான சேதத்தை உண்டாக்கினான். நாக பாசத்தால் இலக்குவன் உள்ளிட்டு அனைவரையும் வீழ்த்தினான். கடைசியில் பிரம்மாஸ்திரத்தை ஏவி அனைவரையும் சாய்த்து விட்டான். வீடணன் அனுமன் மூலம் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து மாண்டவர் அனைவரும் மீண்டனர், உயிர் பெற்று எழுந்தனர். இதைக் கேள்வியுற்ற இந்திரசித்தன் திகைப்படைந்தான். ஏழை மானிடர் எனப் பேசியவனுக்குப் புதிய உண்மைகள் புலப்படுகின்றன “மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்று மேல்நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய் யில் சொன்ன யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண் உறும் ஒருவன் என்றே தேன்நகு தெரியல் மன்னா சேகு அறத் தெரி ந்தது அன்றே! ” பிரம்மாஸ்திரத்திலிருந்தும் இவர்கள் தப்பி மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டார்களென்றால் இவர்கள் மானுடர்களல்ல, வானவர்களுமல்லர், முனிவர்களுமல்லர், ஏற்கனவே வீடணன்