பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் |24 கூறியதைப் போல் யான் எனது என்னும் எண்ணம் தீர்ந்த எண் உறும் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணமிட்டு அம்முடிவுக்கு வருகிறான் இந்திரசித்தன். அற்பமான மானிட ரென்று இழிவாகக் கூறிய நிலையிலிருந்து அவர்களுடைய உண்மையான ஆற்றலைக் கண்ட பின்னர் இந்திரசித்தன் இவ்வாறு கூறுவதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். இந்திரசித்தன் நிகும்பலை யாகத்தைச் செய்யத் தொடங்குகின்றான். அவன் அந்த யாகத்தைச் செய்து முடித்து விட்டால் பின்னர் அவனை யாராலும் வெல்ல முடியாது. எனவே அவன் அந்த யாகத்தைச் செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்னும் வீடணனுடைய ஆலோசனையின் பேரில் இலக்குவனும் அனுமனும் மற்றும் சிலரும் சேர்ந்து யாகத்தைத் தடுக்க முனைந்தனர். அப்போது சற்று கவலையடைந்த இந்திரசித்தனுக்கு மீண்டும் தனது குலமானம் மேலோங்கி வெளிப்பட்டு மனிதர்க்கு ஆற்றாமல் போனேன் என்று என்னை ஏசுவார்களேயென எண்ணுகிறான். "மந்திர வேள்வி போய் மடிந்தது ஆம் எனச் சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன் இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ? ” என்று கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். மேலும் மாருதி இந்திரசித்தனை இகழ்ந்து பேசியபோது அவன் கடுங்கோபம் கொண்டு “இலக்குவன் ஆக மற்ற இராமனேயாக ஈண்டு விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கின் வெள்ளம் குலக்குலமாக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் அலக்கணும் முனிவர் தாமும் அமரரும் காண்பர் அன்றே” என்றும்