பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. *pugota uongol–(pub. 125 “யானுடைய வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் ஊன் உடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பில்லாமல் கூன் இடைக்குரங்கினோடு மனிதரைக் கொன்று சென்று அவ் வானினும் தொடர்ந்து கொல்வேன் மருந்தி னும் உய்ய மாட்டீர்” என்று மேகநாதன் தனது கம்பீரத்தின் மமதையின் உச்சத்திலிருந்து பேசுகிறான். இலக்குவன் வரட்டும், அத்துடன் அந்த இராமனே வேண்டுமானாலும் வரட்டும், யார் வேண்டுமானாலும் அவர்களால் முடிந்தால் என்னை வந்து தடுக்கட்டும். அதை முறித்து நான் போரிடுவேன். குரங்குப் படைக் கூட்டம் கூட்டமாக மடியும். இந்த மனிதர் அடையவிருக்கும் துன்பத்தை முனிவர்களும் வானவர்களும் மற்றவர்கள் அனைவரும் காண்பார்கள். என்னிடம் வில்லும் தோள்வலியும் இருக்கும் போது என் சரங்களிலிருந்து யாரும் தப்ப முடியாது. குரங்குகளையும் மனிதரையும் கொன்று குவிப்பேன். நீங்கள் வான வெளிக்குச் சென்றாலும் அங்கும் நான் தொடர்ந்து வந்து உங்களை ஒழித்தே தீருவேன். இனி எந்த மருந்தும் கூட வந்து உங்களைக் காப்பாற்ற முடியாது” என்று இந்திரசித்தன் மிகுந்த சினத்துடன் கூறுவதைக் கம்பன் சித்தரித்துக் காட்டுவது அருமையான காட்சியாக அமைந்துள்ளதைக் காணலாம். இந்திரசித்தன் மிகுந்த ஆவேசத்துடன் போரிட்டான். எண்ணற்ற சரங்களை ஏவி விட்டான். அத்தனை கணைகளையும் இலக்குவன் தனியாற்றலுடன் தடுத்து விட்டான். பின்னர் இந்திரசித்தன் பாசு பதக்கணையை ஏவினான். எல்லோரும் பயந்தனர். ஆனால் இலக்குவன் அப்பாசுபதக்கணையைப் பாசுபதக்கணையால் தடுத்து விட்டான். இதற்கெல்லாம் வீடணன்தான் காரணமெனக் கருதி இந்திரசித்தன் அவ்வீடணன் மீது பாய்ந்தான். அவனை இகழ்ந்து பேசினான்.