பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sub-god Longo-qpub: - 127 இந்திரசித்தன் மிகுந்த கோபத்துடன் வீடணனைத் திட்டியதுடன் ன் மீது சக்திமிக்க ஆயுதங்களையும் வீசுகிறான். அந்த ஆந்திங்களனைத்தையும் இலக்குவன் தடுத்து அழித்து விட்டான். வீடணனும் கோபம் கொண்டு இந்திரசித்தன் மீது தனது சக்தி ஆயுதத்தை ஏவி, அவனுடைய தேர்ப்பாகனையும் குதிரைகளையும் அழித்தான். இந்திரசித்தன் மேலும் நிற்க முடியாமல் தப்பியோடி இலங்கைக்குள் புகுந்து இராவணனிடம் சென்று தன்னுடைய அனைத்துப் படைகளையும் இலக்குவன் அழித்து விட்டானென்றும் அவர்களை வெல்ல முடியாதென்றும் ‘குலம் செய்த பாவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டாய்” என்றும் அனுபவத்தில் உணர்ந்த உண்மையைத் தன் தந்தையிடம் எடுத்துக் கூறுகிறான். இராவணன் மேகநாதன் கூறியதை மறுத்து மிகுந்த வீரத்துடன் “என்னையே நோக்கியான் இந்த நெடும்பகை தேடிக் கொண்டேன், சயங் கொடுதருவேன் இன்றே மனிதரைத் தனுவொன்றாலே’ என்று மீண்டும் மனிதரை வெல்வேனென்று விரவுரை கூறுவதைக் கம்பன் மிகவும் அழகாகக் குறிப்பிடுகிறார். இங்குதான் இலங்கை வேந்தன், “வென்றிலேன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் நின்றுளேன் அன்றோ மற்ற இராமன் பேர் நிற்குமாயின்” என்னும் மிக அற்புதமான இலக்கியச் சிறப்பு மிக்க வரலாற்றுத் தன்மைக் கொண்ட வாசகத்தைக் கூறுவதைக் கம்பன் மிக அருமையாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார். வெற்றியோ, தோல்வியோ வரலாற்றில் இடம் பெறுவது என்பது ஒரு முக்கியமான நிலைபாடாகும். - இதைக் கேட்ட இந்திரசித்தன் ஒன்றும் மீண்டும் போர்க்களத்திற்குச் செல்கிறன்-பிாயப்போர் நடத்தியும் முப்படை செலுத்தியும் வீரப்போர் புரிந்துபோர்க்களத்தில் இலக்குவன் கணையால் மடிகிறான். முப்படையென்பது பிரம்மாஸ்திரம், சக்க ஆகியவைகளாகும். மேகநாதன் அத் ய் வல்லமை மிக்க சக்தி ஆயுதங்களான முப்படைகளைத்-செலுத்தியும் மானிடரை வெல்ல முடியவில்லை என்பது இங்கு கருத்து மிக்க வாசகமாகும். ம், பாசுபதாஸ்திரம் இந்திரசித்தன் போர்க்களத்தில் மாண்ட செய்தி கேட்டு இராவணனே சோகமடைகிறான். தானே நேரில் போர்களத்திற்குச்