பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. *bugoub losso-QPub: 129 காவியத்தில் இலக்கிய நயத்துடன் மிகவும் சிறப்பாகத் தனது கருத்து மிக்கக் கவிதையை அமைத்துள்ளார் என்றும் நாம் எடுத்தக் கொள்ளலாம். போரில் மூலப்படை அழிந்தது. இராவணன் பெரும் படையுடன் போருக்கப் புறப்பட்டான். “அரக்கர் சேனையோர் ஆயிரம் வெள்ளத்தை அமரில் துரக்க மானிடர் தம்மை என்று ஒரு புடை துரந்து வெருக் கொள்வானரச் சேனை மேல்தான் செல்வான் விரும்பி இருக்கும் தேரொடும் போயவன் இராவணன் எதிர்ந்தான்” ஆயிரம் வெள்ளம் எண்ணிக்கைக் கொண்ட பெரும்படையைத் திரட்டிக் கொண்டு மானிடரைப் போரில் விரட்டியடிக்க, வானரப்படைக்கு அச்சத்தை உண்டாக்கத் தனக்கு விருப்பமானதொரு தேரில் ஏறிக்கொண்டு, இராவணன் கம்பீரமாகப் போர்க்களத்திற்கு வந்தான் எனக் கம்பன் கூறுவது மிக அழகு. இங்கும் மானிடரை விரட்டுவது என்பது குறிப்பிடப்படுகிறது. இராவணன் போருக்கு எழுகிறான். துன் நிமித்தங்கள் தோன்றுகின்றன. அவைகளைப் பொருட்படுத்தாமல் வல்லமையுள்ள என்னோடு இந்த மனிதர் போர் செய்ய முடியுமோ என்ற எண்ணத்துடன் போர்க்களத்தை நோக்கிச் செல்கிறான். “ இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் துன்னிமித்தங்கள் தோன்றின, தோன்றவும் அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ என்னை வல்ல மனிதன்? என்று எண்ணுவான்.” என்று கம்பன் குறிப்பிடுகிறார். கடைசி வரையிலும் மானிடரால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றே கூறிக் கொண்டிருக்கிறான்