பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. •ыougust ЧDII99]]!-- (UPЧэ- | 3 | ஊடுருவிப்புகுந்து சென்றது பற்றியும், மாண்ட பின்னர் இராவணன்டைய முகம் பொலிவுற்றது பற்றியும் கம்பன் கூறும் பாடல்கள் தனியழகு நிறைந்தவையாகும். “முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடியாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர் பருகிப்புறம் போயிற்று இராகவன்தன் புனித வாளி = r மும்மடங்கு பொலிங்க முகம்” வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனமடங்க வினையம்வியத் தெம்மடங்கப் பொருதடக்கைச் செயலடங்க மயலடங்க ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலையடங்க நிலையடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர்துறந்த முகங்களம்மா! என்று கம்பன் மிகுந்த அவலச் சுவையுடன் தனது கவிதைகளை வடித்துக் கூறியுள்ளார். போர்க்களத்தில் மாண்டுகிடந்த இராவணனைக் கட்டித் தழுவிக் கொண்டு மண்டோதரி புலம்புகிறாள். தேவர்க்கும் திசைக்கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும், செங்கண் மாற்கும் ஏவர்க்கீம் வலியானுக்கு என்றுண்டாம் இறுதியென ஏமாப்புற்றேன்