பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் கம்பனுடைய காவியத்தில் இராமபிரான் தனது மானிட வடிவின் காலப் பயணத்தில் குகனையும், சுக்கிரீவனையும் வீடணனையும் சந்தித்து அவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த சந்திப்புகள் கதையில் முக்கிய திருப்பங்களைக் கொண்டு வருகின்றன. இந்த சந்திப்புகள் மூலம் பரஸ்பரம் உதவி செய்து கொள்வதற்கான பரஸ்பர நலன்களின் படியிலான உடன் பாடுகள் ஏற்படுகின்றன. இந்த சந்திப்புகள் மூலம் நட்புறவு மட்டுமல்லாமல் சகோதர பூர்வமான உறவுகளும் உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன. இத்தகைய சகோதர உறவு என்பது நமது பாரத சமுதாயத்தின் சமூக நீதிக்கு அடிப்படிையானதாகும். இந்த சந்திப் நிகழ்ச்சிகளில் கம்பன் தலை சிறந்த பல ச - # நெறிமுறைகளையும் சீலங்களையும் பற்றி/குறிப்பிட்டுக் கூறுகிறார். நாட்டின் ஒன்றுமையையும் ஒருமைப் பாட்டையும் மனதில் கொண்டு சகோதர உறவை வளர்க்க வேண்டிய அவசியத்திற்கு வழி காட்டியாகக் கதா பாத்திரங்களை முன்னிருத்தியுள்ளார். இதில் ஒரு பக்கம் இராமனும் இலக்குவனும் பரதனும், குகனும் சுக்கீரீவனும் அனுமனும் வீடணனும் மறுபக்கம் வாலியும், கும்பகருணனும், இராவணனும் வெறும் கதாபாத்திரங்களாக மட்டுமல்லாமல் நமது பாரத சமுதாயத்தின் உயிர்துடிப்பான, நமது வாழ்க்கையின் பகுதியான நமது வணக்கத்திற்கும் மரியாதைக்கும் பெருமதிப்பிற்குமுரிய பாத்திரங்களாக நம்மிடையில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நமது உள்ளங்களில் நமது நினைவில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். கம்பன் தனது மகாகாவியத்தில் பல சகோதரர்களைக் காட்டுகிறார். அவர்களில் அயோத்தியின் சகோதரர்கள் நால்வர், இலங்கையின் சகோதரர்கள் மூவர், கிட்கிந்தையின் சகோதரர்கள் இருவர் ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். இந்தச் சகோதர உறவுகள் பற்றிய கம்பனுடைய பாடல்கள், நாம் கருத்துான்றிக் கவனிக்கத் தக்கவை. இலக்கியத்தன்மை, சகோதரத்வம், மனிதாபிமானம், அரசியல், சமூக உறவுகள் பற்றிய சீரிய கருத்துக்கள் நிறைந்தவை. -