பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 136 இராமனும் குகனும் இராமன் சீதையுட ம் வனவாசத்திற்குப் புறப்பட்டுக் கங்கைத் குகன் இராமனை சந்தித்தான். இந்த குகன் ஆயிரக்கணக்கான மரக்கலங்களுக்கு நாயகன், தூய்மையான கங்கிைத் துறைகளுக்குப் பரம்பரையான உரிமையுடையவன், கங்கைக் கரையிலுள்ள நகரங்களுக்கும் ஊர்களுக்கும் சொந்தம்ானவன், வேடர்களின் தலைவன், நாவாய் வேட்டுவன், அந்த (குகன் இராமனை வரவேற்றான். இராமனுக்கு தேனும் மீனும் சேர்ந்த உணவளித்தான். இருவரும் சமமாக அமர்ந்து உணவருந்தினார்கள். அன்பினால் கொடுத்த அந்த உணவை இராமன் மிக விருப்பத்துடன் உண்டான். குகனுடைய உதவியால் இராமனும் சீதையும், இலக்குவனும் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றனர். இராமன், சித்திரக் கூடத்திற்குச் செல்வதற்கு வழி கேட்டுப் புறப்படத் தயாரானான். அப்போது குகன் தானும் தனது படையுடன் இராமனுக்குத் துணையாக வருவதாகக் கூறினான். இராமன் அதற்குக் கூறிய பதிலைக் கம்பன் தனது அழகிய கவிதைகளில் வடித்துக் கொடுத்துள்ளார். "அன்னவன் உரைகேளா, அமலனும் உரை நேர்வான் என் உயிர் அனையாய் நீ, இளவல் உன் இளையான் இந் நன்னுதலவள் நின்கேள், நளிர் கடல் நிலம் o எல்லாம் உன்னுடையது நான் உன் உரிமையின் உளென் என்னா” தன்படிையுடன் உடன் வருவேன் என்று கூறிய குகனிடம் இராமன் நீ என் உயிருக்கு உயிரானவன். எனது தம்பி இலக்குவன் உனது தம்பியாவான். இந்த சீதை உனதுகிளை, இந்தக் குளிர்ந்த நீர் சூழ்ந்த நிலமெல்லாம் உன்னுடையது, நான் உனது ஆட்சியின் கீழ் உள்ளேன் என்று கூறுகிறான்.