பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் | 5 , --~ "அங்குள்ள கிளை காவர் அமைதியின் உளன் உம்பி; இங்குள கிளை காவதிற்கு யார் உளர் இசையாய் நீ உன்கிளை என தன்றோ, உறு துயர் உறலாமே என்கிளை இதுகா! என் ஏவலின் இனிது என்றான்.” அயோத்தியில் உள்ள நமது கிளைக்கு உன் அருமைத் தம்பி பரதன் காவலாக அமைந்துள்ளான். இங்குள்ள நமது கிளைக்கு எனது ஆணையின் படி நீ காவல் காத்து நிற்பாயாக என்று இராமன் கூறுவதில் இரு நாடுகளின் இணைப்பும் அடங்கியிருப்பதைக் காணலாம். குகன் பரதன் சந்திப்பு தசரதன் மறைவுத் செய்தி கேட்டுப் பர ஆயிோத்திக்குத் திரும்பினான். அயோத்தியின் காட்சியைக் கண்டு/கலங்கினான். தசரதன் உடலை நல்லடக்கம் செய்து முடித்துத் துயர நாட்கள் முடிந்த பின்னர் பரதன் இராமனைத் தேடிச் சென்று அவனைச் சந்தித்து நாடு திரும்பி|ஆட்சிப் பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும் என்று அவனை அழைத்து வரத் தனது படை பரிவாரங்களுடன் சுற்றம் சூழப் புறப்பட்டான். கங்கைக் கரையை அடைந்தான். பரதனின் படை பரிவாரங்களைத் தொலைவில் நின்று குகன் பார்த்த போது முதலில் பரதனைத் தவறாகப் புரிந்து கொண்டு சந்தேகப் பட்டுக் கோபமடைந்தான். ஆனால் பரதனின் நிலையைக் கூர்ந்து கவனித்தப்போது உண்மையை உணர்ந்து பரதனை அணுகிப் பணிகிறான். குகனும் பரதனும் சேர்ந்து கங்கையைக் கடந்து இராமன் இருக்குமிடம் நோக்கிச் செல்லத் தீர்மானித்தனர். பரதனும் தாய்மார்கள் மூவரும் மற்றவர்களும் கங்கையைக் கடக்கக் குகன் ஏற்பாடு செய்தான். பரதன், குகன் சத்துருக்கனன் தாய்மார்கள் மூவர், சுமந்திரன் ஆகியோர் ஒரு படகில் சென்றனர் அப்போது பரதன் குகனிடம் தாய் மார்கள் மூவரையும் அறிமுகப் படுத்துகிறான். “என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார்’ என்று