பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cold /od -290, "0/09/III/1 / 1 Intrados - , 2. és að//ossroovi | 5*) கன்று பிரி கார் ஆவின் துயருடைய கொடி வினவக் கழற்கால் மைந்தன் இன்துணைவன் இராகவனுக்கு இலக்குவதற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் குன்றனைய திருநெடுந் தோள் குகன் என்பான் இந்நின்ற குரிசில்” என்றான் கோசலையை இன்னார் என்று பரதன் அறிமுகப் படுத்தியவுடன் குகன் அவளுடைய பாதங்களில் விழுந்து கண்ணிர் விட்டான். அவனைப் பார்த்து இவன் யார் என்று கோசலை கேட்டாள் அப்போது பரதன் இவன் இராகவனுக்குத் துணைவன், இலக்குவனுக்கும் இளையவனுக்கும் எனக்கும் மூத்தவன். கங்கைக் கரைக்கு அதிபன், இவன் பெயர் குகன் என்று கூறுகிறான். இராமன் காட்டிய சகோதர பாசத்தைப் பரதன் வாயிலாகவும் கம்பன் எடுத்துக் கூறுகிறார். குகனை அறிமுகப் படுத்தியவுடன் கோசலையும் கூறுகிறாள், “நைவீர் அலிர் மைந்தீர் இனித்துயரால் நாடு இறந்து காடுநோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்று = ஆம் அன்றே விலங்கல் திண் தோள் கை வீரக்களிறு அனைய காளை இவன் தன் னோடும் கலந்து நீவிர் ஐவிரும் ஒருவிராய் அகலிடத்தை நெங்காலம் அளித்தீர் ” என்றாள். “மைந்தர்களே நீங்கள் துயரம் அடைய வேண்டாம் இராமன் காடு போனதும் ஒரு வகையில் நல்லதாயிற்று. வல்லமைமிக்க இந்த குகனோடு சேர்ந்து நீங்கள் ஐவரும் ஒருவராய் இருந்து இந்த உலகை நெடுங்காலம் ஆழ்வீர்களாக” என வாழ்த்துகிறாள். குகனை ஐந்தாவது உடன் பிறப்பாகக் கோசலையும் குறிப்பிடுவதைக் கம்பன் மிக அழகாக இங்கு எடுத்துக் கூறுவதைக் காணலாம்.