பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 5H, LD LJ6UTI6UT சகோதரதவமும சகோதராகளும |-|{} இராமன் சுக்கீரீவனை சந்தித்தல் இராமனும் சுக்கிரீவனும் சந்தித்த| காட்சியைக் கம்பன் மிக அருமையாக விவரித்துக் கூறுகிறார். ' இருவரும் பச்சை மலைப் பாறையில் அமர்ந்திருந்த போது ஞாயிறும் திங்களும் போல் காட்சி அளித்தனர். இருவரும் சேர்ந்தது தவமும் முயற்சியும் சேர்ந்தது போலவும் கல்வியும் ஞானமும் சேர்ந்தது போலவும் ஆயினர். முயற்சி இருந்தால் தான் தவமும் பயன்தரும் என்பதையும், வெறும் கல்வி மட்டும் போதாது அத்துடன் ஞானமும் சேர வேண்டும் என்பதும் கம்பன் கூறியுள்ள அறிய கருத்துக்களாகும். இராமனும் சுக்கிரீவனும் சந்தித்துக் கலந்து பேசுகின்றனர். எனக்கு முன் வந்தோன் என்னை அடித்து விரட்டினான். அவன் என்னை அடித்துத் துரத்திப் பின் தொடர நான் இந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்தேன். பாதுகாப்பாக இங்குவந்து பதுங்கிக் கொண்டேன். உன்னிடம் சரணடைகிறேன். என்னைக் காப்பாயாக என்று இராமனிடம் சுக்கிரீவன் கூறுகிறான். “முரண் உடைத்தடக்கை ஒச்சி முன்னவன் பின் வந்தேனை இருள் நிலைப் புறத்தின் காறும் உலகெங்கும் தொடர இக்குன்று அரண் உடைத்தாகி உய்ந்தேன் ஆருயிர் துறக்கல் ஆற்றேன் சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்” “எனக்கு முன் பிறந்த எனது அண்ணன் ல் அவனுக்குப் பின் வந்த இளையோனாகிய என்னை அவனுடைய நீண்ட வலிமை மிக்க கைகளால் அடித்தான், அடித்து) துரத்தினான் உலகின் எல்லைவரை துரத்தினான். நான் எங்கு ஓடினாலும் என்னைத் துரத்தித் துரத்தி அடித்தான். கடைசியில் அவன் தனக்குள்ள ஒரு சாபத்தின் காரணமாக அணுக முடியாத இந்தப் பாதுகாப்பான குன்றுக்கு வந்து சேர்ந்தேன். எனது உயிர் போகாமல் தப்பினேன். நீ வந்து சேர்ந்தாய். உன்னிடம் சரணடைந்தேன். நீ என்னைக்