பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன_ஒரு_சமுதாயப்-பார்வை-அ.-சீனிவாசன் |4| காப்பாயாக’ என்று சுக்கிரீவன் இராமபிரானிடம் அடைக்கலம் அடைந்தான். அண்ணனிடம் அடிபட்டு அவனால் விரட்டப் பட்டு உயிருக்கு அஞ்சிப் பதுங்கிக் கிடக்கும் ஒருவனும் தம்பியால் நாட்டை யிழந்துக் கானகத்தில் சுற்றித்திரிந்து மனைவியையும் பிரிந்து, கவலை நிரம்பிய நிலையில் துணை கிடைக்காதாவென்று ஏங்கிய நிலையில் இருக்கும் மற்றொருவனும் சந்திக்கும் காட்சியை மிகவும் சிறப்புறக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். சுக்கிரீவன் இராமனிடம் அடைக்கலம் கேட்கிறான். அதைக் கேட்ட இராமனும் இரக்கம் கொள்கிறான். நம் இருவருக்கும் ஏற்பட்ட துன்ப துயரங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சென்றது போகட்டும், இனிவருவன இருவருக்கும் ஒன்றாக இருக்கட்டும். சேர்ந்து செயல்படுவோம் என்று இராமன் வாக்குறுதி கொடுத்து, “மற்றினி உரைப்பது என்னே! வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார், தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது, என் காதல் சுற்றம் உன் சுற்றம், நீ என் இன்னுயிர்த் துணைவன்” என்றான் இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. இனியாராக விருந்தாலும் சரி, அவர்கள் எந்த உலகில், எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, வானுலகத்திலோ இப்பூவுலகத்திலோ இருப்பவர் எவராயிருந்த்ாலும் சரி, உன்னைத் துன்புறுத்தியவர்கள் என்னைத் துன்புறுத்தியவர்களாவார்கள். உனக்குக் கெடுதல் செய்தவர்கள் எனக்கும் கெடுதல் செய்தவர்களாவார்கள். உனக்கு வேண்டியவர்கள் எவராயினும் சரி, எப்படிப்பட்டவர்களாயினும் சரி அவர்கள் தீயவரேயென்றாலும் அவர்கள் எனக்கும் வேண்டியவர்கள்தான் என்று இராமன் கூறுகிறான்.