பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் ~~PQ_~Qд?»лші? பார்வை-அ.-சீனிவாசன் 143 அசைவில் கற்பின் அவ்வணங்கை விட்டு அருளுதி அதன் மேல் விசையம் இல் எனச் சொல்லினான் அறிஞரின் மிக்கான்.” இலங்கையின் இசைப் பெருமையும் செல்வமும் உயர் குலத்துச் சிறப்புகள் எல்லாம் அழிந்து போகாமல் எஞ்சி நிற்கவும், நமக்கு வசையும் கீழ்மையும் ஏற்படாமலும் நமது கிளையெல்லாம் அழிந்து போகாமலும் இருக்க வேண்டுமானால் அந்தக் கற்பின் அணங்கை விட்டு விடுவதே நல்லது என்று வீடணன் தனது அண்ணனுக்கு அறிவுறை கூறுகிறான். வீடணன் கூறியவற்றிற்கெல்லாம், இராவணன் கடுங்கோபத்துடன் மறுத்துக் கூறியும் மீண்டும் வீடணன் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இராமனுடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துக் கூறியும் இரணியன் மாண்ட கதையையெல்லாம் விளக்கிக் கூறியும் இராமன் எல்லாவற்றிற்கும் முதன்மையான ஒரு தனித்தலைவன் என்றும் அவன் மனிதனாக வந்து அவதரித்துள்ளான் என்றும் அவனை எதிர்த்து நிற்க வேண்டாம் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். ஆயினும் அந்த அறிவுரைகளுக்கு இராவணன் செவிசாய்க்கவில்லை. 'வஞ்சனை மனத்தினை, பிறப்பு மாற்றினை, நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ” என்று வசை கூறி “என் எதிரில் நிற்காதே போ” என்று ஆணையிட்டு இராவணன் வீடணனை விரட்டி விட்டான். வீடணன் தனக்கு ஆதரவான அமைச்சர்களுடன் இராவணனுடைய சபையிலிருந்தும் வெளியேறிக் கடலைக் கடந்து இராமன் இருந்த இடத்தை அடைந்தான். வீடணனுடன் அனலன், அநிலன், அரன், சம்பாதி என்னும் அமைச்சர்கள் நால்வரும் உடன் சென்றனர். “எந்தையே, இராகவ, சரணம்” என்று கூவி வீடணன் இராமனிடம் வருகிறான். இந்தச் சத்தத்தைக் கேட்டு இராமன் அது யாரென்றறியத் தனது ஆட்களை அனுப்பினான். இராமன் அனுப்பிய