பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |44 ஆட்கள் வீடணனிடம் சென்று அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த வானரப் படை வீரர்களை விலக்கிவிட்டு, வீடணனை யார் என்று விசாரித்தனர். விசாரித்துத் திரும்பிய வானரப்படை வீரன் தான் விசாரித்த விவரங்களைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான். “முரண் புகு தீவினை முடித்த முன்னவன் கரண் புகு சூழலே சூழக் காண்ப தோர் அரண் பிறிது இல் என அருளின் வேலையைச் சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான்.” தனக்கு முன்னவனான இராவணன் தன்மனம் போன போக்கில் சென்று பல தவறுகளைச் செய்துள்ளதால் வேறு வழியின்றிக் கருணைக் கடலாகிய உன்னைச் சரண் புகுந்தனன் என்றும், “ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி பால் மேய தோர் சிந்தையும் மெய்யும் வேதியர் நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் துயவன் என்பது ஒர் பொருளும் சொல்லினான்” “அவன் தரும நெறி கொண்டவன் போலவும் ஆதி மூர்த்தியாகிய தங்கள் பால் உள்ளமும் உடலும் கொண்டவன் போலவும் காணப் படுகிறான்” என்றும் எடுத்துக் கூறினான். இந்த விவரங்களை அறிந்து கொண்ட இராமன், வீடணனைப் பற்றித் தனது நண்பர்களிடம் கருத்துக் கேட்டான். சுக்கிரீவன், சாம்பவன், நீலன், முதலியோரும் கடைசியில் அனுமனும் தங்கள் கருத்துக்களைக் கூறுகின்றனர். இதில் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய அனுபவப் பயிற்சி மற்றும் உணர்வு நிலையின் பக்குவத்தன்மைக்கு ஏற்பத் தங்களுடைய கருத்துக்களை மனம் விட்டுக் கூறினார்கள். இதைக் கம்பன் மிகவும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இதில் சுக்கிரீவன் முதலியோர் தங்களுடைய சொந்தக்