பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |40 பெற்றுடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன்கைவில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் எனக் கருதி விரைவின் வந்தான் என்று அனுமன் அறிவாற்றலுடனும் ஆழ்ந்த அனுபவத்துடனும் கூறியதைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். பகைவரிடமிருந்து வந்தவரை ஏற்காமல் இருப்பது நகைப் பிற்கிடமாகி விடும். இவன் வரவு நல்வரவே என்று அனுமன் கூறினான். மற்றவர்களும் அனுமனும் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் கவனமாகக் கேட்ட பின்னர், இராமன் தனது எண்ணத்தை எடுத்துரைத்தான். “கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று காதல் அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதியில்லை பெருந்துயர் தவத்தினாலும் பிழைப்பிலன் என்னும் பெற்றி திருத்தியது ஆகும் அன்றே நம் வயின் சேர்ந்த செய்கை” “மற்று இனி உரைப்பது என்னோ! மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி! அன்னது அன்றெனின் பிறிதொன்றாலும் வெற்றியே பெறுக! தோற்க, வீக வியாது வாழ்க பற்றுதல் அன்றி யுண்டோ அடைக்கலம் LE , பகர்கின்றானை” “அடைக்கலம் கூறுகின்றான், என்னைச் சரண் என வாழ்கின்றான், உய்ய நிற்கு அபயம் என்றான். பூரியரேனும் தம்மைப்