பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |48 மண்ணில் மார்புற வீழ்ந்து வணங்கினான். அவனை எழுப்பி இருத்தினான் இராமன். "அழிந்தது பிறவியென்னும் அகத்தியல் முகத்தில் காட்ட, வழிந்த கண்ணின் மண்ணில் மார்புற வணங் கினானைப் பொழிந்ததோர் கருணை தன்னால் புல்லினை என்று தோன்ற எழுந்து இனிது இருத்தி என்னா மலர்கையால் இருக்கை ஈந்தான்” வீடணனை, இராமன் தனது கைகளால் பற்றி எழுப்பி இருக்கை கொடுத்து அமரச் செய்தான். “ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர்ந்தே ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என்பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று காறும் வாள் எயிற்று அரக்கர்வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்” இராமன் வீடணனை நோக்கி அருள் சுரந்து மகிழ்ச்சி பெருகி, உவகை பொங்கி “உலகம் உள்ளளவும் நான் உள்ளளவும் அரக்கர்வாழும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்” எனக் கூறி விடணனுக்கு முடிசூட்டச் செய்து இலங்கைக்கு அரசனாக்கினான். இலங்கைக்கு அரசனாக்கப் பட்ட வீடணனைக் கட்டித்தழுவி இராமன் மகிழ்ச்சியுடன் கூறினான், “குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் குன்று சூழ்வான்