பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் | 5 | கூறப்பட்டிருக்கின்றன. மறுபக்கம் சகோதர முரண்பாடு, மோதல், சண்டை உடன் பிறந்தே கொல்லும் வியாதி, நஞ்சு, போன்ற கருத்துக்களும் கதையில் மோதி வருகின்றன. சமுதாயத்தின் அரசியல் நிலை பாட்டின் பிரதிபலிப்பாகவே அவை அமைந்திருக்கின்றன. இராமாயணக் கதை ஒரு மரபு வழிக் கூட்டத்தின் தலைமைக்கும் மற்றொரு மரபு வழிக் கூட்டித்தின்-தலைமைக்கும் இடையில் நடந்த போராட்டத்தைக் குறித்கிறது என்றும் மகாபாரதக் கதை ஒரே மரபுவழிக் கூட்டத்தில் H காளிகளுக்கிடையில் நடந்த போராட்டத்தைக் குறிக்கி றும் ஆராய்ச்சியாளர்கள் Aலரும் சமூகவியல் அறிஞர்களும் Aல்ரும் குறிப்பிடுகிறார்கள். மகாபாரதக் கதையிலும் சகோதர பாசமும் சகோதரச் சண்டையும் பின்னிக் கிடப்பதைக் காண்கிறோம். ஆயினும் இராமாவதாரக் கதையில் மூன்று களங்களிலும் உள்ள சகோதரர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை, பாசம், பிணைப்பு, பரஸ்பர அன்பு மரியாதை, கட்டுப்பாடு, வேற்றுமை, முரண்பாடுகள் பகை, மோதல், ஆகியவைகளைப் பற்றி விரிவாகக் கூறும் கம்பன் கடைசியில் முரண் பட்டவர்களை முடித்து மூன்றுகளங்ளிலும் உள்ள முக்கிய பாத்திரங்களையும் இணைத்து ஏழுவரையும் ஒரு குடும்பத்தினரைப் போல் ஒற்றுமைப்படுத்தி அனைத்தளாவிய சகோதரத்வத்தைக் கம்பீரமான கவிதை நயத்துடன் வடித்துக் காட்டியுள்ளது மறக்க முடியாத உன்னதமான காட்சியாகும். அது கம்பனின் பெருமையும் தமிழின் பெருமையுமாகும். அயோத்தியில் இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் வரும் சகோதரர்களில் பரதனைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறப்பட்டிருக்கிறது. இராமனும் பரதனும் ஒருவருக்கொருவர் அளவு கடந்த அன்பும் சகோதர பாசமும் பரஸ்பரம் நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருப்பதைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். விசுவாமித்திரன் தனது தவத்தைக் காக்க இராம இலக்குவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தவம் முடிந்த பின்னர் முனிவர் இரு அரச குமாரர்களையும் மிதிலை நகருக்கு