பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதராகளும் |^.” அழைத்துச் செல்கிறார். அங்கு இராமன் ஜன்க மகாராஜனுடைய மாளிகையில் இருந்த வில்லை வளைத்து சுயம்வர நிபந்தனையில் வெற்றி கண்டு இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அத்துடன் இராமனுடைய இதர மூன்று சகோதரர்களுக்கும் (தம்பிகளுக்கும்) திருமணம் நிச்சயமாகிறது. தசரதச் சக்கரவர்த்தியும் அவனுடைய பரிவாரங்களும் மிதிலை வந்தடைகின்றனர். எதிர்வந்த இராமனை அவன் தந்தை தசரதன் கட்டித் தழுவுகிறான். பின்னர் இராமன் மூன்று தாயார்களையும் வணங்கி எழுகிறான். மூன்றாவதாகப் பரதனைக் கட்டித் தழுவுகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் கீழ்க்கண்டவாறு மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். "உன்னுபேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கணிர், பன்னு தாரைகள் தரித்தொழுதெழும் பரதனைப் பொன்னின் மார்புற அனைத்து உயிர் உறப்புல்லினான் தன்னை அத்தாதை முன் தழுவினால் என்னவே!” பரதனுக்கு இத்தனை அடை மொழிகளும், விளக்கமும் கொடுக்கிறார் கம்ப நாடர். “உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கணிர் பன்னு தாரைகள் தரித்துத் தொழுது எழும் பரதனை” என்று கம்பன் குறிப்பிடும் போது பரதனுடைய சகோதர பாசத்தை வெகுவாகப் புகழ்ந்து காட்டுகிறது. இவ்வரிகள் உன்னு பேரன்பு' என்றால் எப்போதும் இடைவிடாது மனதில் கொண்டிருக்கும் பேரன்பு என்பதாகும். “மிக்கு ஒழுகி ஒத்து”என்றால் பொங்கி வழிந்து ஒழுகிக் கொண்டேயிருப்பதை யொத்த ஒண்கணிர் ஒளிமிக்க கண்கள், “நீர் பன்னு தாரைகள்”என்பது நீர் நெருக்கிய நீர் பொங்கிய தாரைகளைச் சிந்த - ஆனந்தக் கண்ணிர் சிந்த இராமனைத் தொழுது எழும் பரதனை, அந்த இராமன் தனது தந்தை தன்னைத் தழுவியதைப் போலத் தழுவிக் கொண்டான் என்று கம்பன் விரிவு படக் கூறுவது மிக அருமை. இதில் இராமன் பால் பரதன் காட்டும் அன்பும் மரியாதையும் பரதன் பால் இராமன் காட்டும் அன்பும் மரியாதையும் சிறப்புற எடுத்துக் கூறப்படுகிறது.