பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சினிவாசன் |53 இராமனும் தனது இளவலைப் பாசத்தோடு தழுவுவதைத் தந்தைக்கு ஈடாகக் கம்பன் இங்கு எடுத்துக் காட்டியுள்ளார். தந்தைக்கு ஈடாக என்று குறிப்பிடும் போது அது சாதாரணமாக ஒரு தந்தை தன் மகனுக்குக் காட்டும் அன்பைப் போன்றதல்ல. தசரதன் இராமன் மீது காட்டும் அன்பைப் போன்றதாகும். அது தனித் தன்மை ஆனதாகும். தசரதன் தன் மகன் இராமன் மீது உயிருக்கும் மேலான அன்பைக் கொண்டிருக்கிறான். இராமனைப் பிரிந்தால் தசரதனுடைய உயிரும் பிரிந்து விடும். அத்தனை ஆழ்ந்த அன்பு. எனவே இராமன் பரதன் மீது செலுத்தும் அன்பு, தசரதன் இராமன் மீது செலுத்தும் அன்புக்கு ஈடாகக் கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறு கம்பன் இராமனுக்கும் பரதனுக்கும் இடையிலுள்ள அன்பை, சகோதர பாசத்தை எடுத்துக் காட்டியிருக்கும் இந்தக் காட்சி அயோத்தியின் சகோதர அன்பை எடுத்துக் கூறும் தொடக்க மேயாகும். அடுத்து இராமனும் அவனது தம்பிமார்களும் ஒன்றாகச் சேர்ந்து மிதிலை நகரின் வீதி வழியில் செல்கிறார்கள். இராமன் தேரின் மீதும் தம்பிகள் குதிரைகள் மீதும் ஏறிச் சேர்ந்து ஒன்றாகச் செல்கிறன்றனர். இங்கும் நான்கு சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இணைந்து செல்வதை ஒரு அழகிய காட்சியாகக் கம்பன் காட்டுகிறார். இராமனுக்கு முடி சூட்டத் தசரதன் திட்ட மிடுகிறான். பரதனை அவனுடைய பாட்டன் அழைத்திருப்பதாகக் கேகைய நாட்டிற்கு அனுப்பிவிட்டான். இராமனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. அதற்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. முதலில் இச்செய்தியைக் கேட்டு கைகேயி மகிழ்சியடைகிறாள். பின்னர் கூனியின் சூழ்ச்சியால் கைகேயி மனம் மாறி இராமனை அழைத்து நாட்டை பரதன் ஆளட்டும் நீ காட்டிற்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து வாவென்று அரசன் கூறியுள்ளான் என்று கூற, இராமன் எந்தவிதமான மாறுபாடும் இல்லாமல், “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறு ப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ