பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் | ՀՀ ஆக்கினேன், அன்னது பொறுக்கலாமை யால் நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து” என்றாள் கைகேயி கூறும் இந்தச் செய்தியைக் கம்பன் தனது தமிழ்க் கவிதையால் சுருக்கமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் தெளிவாகவும் உண்மை விவரத்தை எடுத்துக் கூறுகிறார். கைகேயியைக் கடிந்து இகழ்ந்து பரதன் பலவாறாக வருந்திப் பேசுகிறான், "இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவெண்ணா அறந்தான் ஈதென்று அன்னவன் மைந்தன் அரசெல்லாம் துறந்தான், தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே” என்பது பரதனுடைய வேதனை நிரம்பிய சொற்களாகும் தந்தை யோ தான் கொடுத்த வரத்தைக் காப்பாற்றி அந்த வரத்திற்குக் கேடில்லாமல் உயிரைவிட்டான். தந்தையின் சொல்லைக் காப்பது கடன் என்னும் அறத்தை நிலை நாட்ட அந்த மன்னனுடைய மைந்தனும் அரசைத் துறந்து வனம் சென்று விட்டான். அவனோடு உடன் பிறந்தவன் தனது தாயின் சூழ்ச்சி மூலம் பூமியைத் தனதாக்கிக் கொண்டு ஆட்சி நடத்துகிறான் என்னும் அவப்பெயர் எனக்கு உன்னால் வந்திருக்கிறது என்று பரதன் தன் தாயைத் திட்டுகிறான். மேலும் பல கடுஞ்சொற்களைக் கூறி மனம் வருந்துகிறான். கோசலை இருக்குமிடம் சென்று கதறுகிறான். தன்னை சபித்துக் கொள்கிறான். . பொய் சாட்சி சொன்னவன் . போருக்கு அஞ்சினவன் . கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் . எய்திடத்து இடர் செய்தோன்